புதிய செவர்லே ஸ்பார்க் (பீட்) அறிமுகம்

இந்தியாவில் செவர்லே பீட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் செவர்லே ஸ்பார்க் ஹேட்ச்பேக் காரினை நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்பார்க் கார்

புதிய பீட் (ஸ்பார்க்) காரினை வாக்ஸ்ஹால் மற்றும் ஓபல் காரல் சிட்டி கார்களை அடிப்படையாக கொண்டு வடிவமைத்துள்ளனர். மிக நேர்த்தியான முகப்பு தோற்றத்தினை கரூஸ் வடிவில் பெற்றுள்ளது.

புதிய ஸ்பார்க் (பீட்) காரில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இடவசதி கூடுதலாக கிடைக்கும். ஆனால் உயரம் குறைந்துள்ளது.

98 குதிரை ஆற்றல்களை தரவல்ல 1.4 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வேக மெனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷனை கொண்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் புதிய ஸ்பார்க் (பீட்) கார் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

Exit mobile version