மஹிந்திரா eவெரிட்டோ அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா எலக்ட்ரிக் வெரிட்டோ கார் மஹிந்திரா eவெரிட்டோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வெரிட்டோ மாடல் வெரிட்டோ செடான் காரை அடிப்படையாக கொண்டதாகும்.

இவெரிட்டோ காரின் தோற்றத்தில் க்ரோம் பட்டை மற்றும் முகப்பு கிரில் போன்ற  சாதரன மாற்றங்களை தவிர வெரிட்டோ காருக்கும் தோற்றத்தில் பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லை. உட்புறத்தில் எலக்ட்ரக் காருக்கு உரித்தான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது.  72 வோல்ட் 3 பேஸ் இன்டக்‌ஷன் ஏசி மின்சார மோட்டாரில் இருந்து 41 hp திறன் மற்றும்  91 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் வகையில் வெரிட்டோ மகிழுந்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் உச்ச வேகம் மணிக்கு 86 கிமீ வரை எட்டவல்லதாகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்க இயலும். முழுதாக சார்ஜ் ஏற 7 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள இவெரிட்டோ கார் மத்திய அரசின் FAME திட்டத்தின் கீழ் சலுகை பெறும் என்பதனால் 7.50 லட்சம் விலையில் கிடைக்கலாம்.

 

Share