Automobile Tamil

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் மாருதி சுசூகி அறிமுகம் செய்துள்ளது. மாருதி நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக ப்ரெஸ்ஸா வந்துள்ளது.

maruti-suzuki-vitara-brezza

எஸ்யூவி கார்களின் மோகத்திற்கு ஏற்ப இந்திய வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் நோக்கில் மிக சிறப்பான ஸ்டைலான தோற்ற அம்சத்தினை பெற்றுள்ள விட்டாரா ப்ரெஸ்ஸா கார் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் ஈக்கோஸ்போர்ட் , டியூவி300 போன்ற எஸ்யூவி கார்களுடன் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.860 கோடி முதலீட்டில் 98 சதவீத பாகங்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள ப்ரெஸ்ஸா எஸ்யுவி காரின் நீளம் 3995மிமீ , அகலம் 1790மிமீ மற்றும் உயரம் 1640மிமீ மேலும் வீல்பேஸ் 2500மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரண்ஸ் மிக அதிகமாக 198மிமீ உள்ளது.

மிக நேர்த்தியான எஸ்யூவி கார்களுக்கு உரித்தான தாத்பரியங்களுடன் அமைந்துள்ள பிரெஸ்ஸா காரின் முகப்பில் அமைந்துள்ள கிரில் சிறப்பாக உள்ளது. பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , புராஜெக்டர் முகப்பு விளக்குகள் என பல வசதிகளை பெற்றுள்ளது. பக்கவாட்டு தோற்றத்தில் மிகவும் உயரமான வீல் ஆர்ச் மற்றும் 16 இஞ்ச் அலாய் வீலை பெற்றுள்ளது.

உயர்ரக வேரியண்டில் இரட்டை வண்ண கலவையில் மிக நேர்த்தியாக அமைந்துள்ள காரில் 90PS ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 200Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் விற்பனைக்கு வரும்பொழுது பெட்ரோல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் இடம்பெறலாம்.

ஓட்டுநருக்கான காற்றுப்பை நிரந்தர அம்சமாக முன்பக்க இரட்டை காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் இபிடி போன்ற அம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் ஆப்ஷனலாக கிடைக்க பெறும். மாருதி டீலர்கள் வாயிலாகவே விட்டாரா ப்ரெஸ்ஸா விற்பனை செய்யப்பட உள்ளது.

[envira-gallery id="7155"]

 

Exit mobile version