ஹூண்டாய் HND-14 கார்லினோ எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

ஹூண்டாய் க்ரெட்டா வெற்றியை தொடர்ந்து ஹூண்டாய் HND-14  கார்லினோ காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் கான்செப்ட் மாலை டெல்லி 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி காராக HND-14 கார்லினோ விளங்கும்.

எதிர்கால காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக மையப்படுத்தப்பட்டுள்ள காரலினோ மாடல் பற்றி அதிக விபரங்களை ஹூண்டாய் இன்னும் வெளியிடவில்லை. மேலும் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் பிளக் அன்ட் பிளே தளத்தில் பல நவீன வசதிகளை கொண்ட அடுத்த தலைமுறை மாடலாகவும் ஹூண்டாய் இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உருவாக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

எல்இடி விளக்குகளுடன் மிக நேர்த்தியான் ஸ்டைலிங் அம்சங்களுடன் சிறப்பாக காட்சியளிக்கும் கான்செப்ட் மாடலில் முகப்பு தோற்றம் மிக கம்பீரமாக உள்ளது. பக்கவாட்டு மற்றும் பின்புறங்களிலும் முந்தைய மாடல்களின் டிசைன் தாத்பரியங்களை பயன்படுத்தாமல் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் HND-14 உட்புறத்தில் பல நவீன வசதிகள் நேவிகேஷன் வயர்லெஸ் ரியர் வீயூ கேமரா , 6 காற்றுப்பைகள் , ஹீல் அசிஸ்ட் போன்றவற்றை பெற்றிருக்கும். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம். மேலும் ஹூண்டாய் நிறுவனம் டியூசான் , ஐ30 , ஹூண்டாய் N பெர்ஃபாமென்ஸ் பிராண்டு போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளது.

Exit mobile version