ஹோண்டா நாவி ஸ்கூட்டர் வருகை ?

புதிய ஹோண்டா நாவி (NAVI) என்ற பெயரில்  ஸ்கூட்டர் அல்லது மோட்டார்சைக்கிள் ஒன்றை வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஹோண்டா நாவி 125சிசி ஸ்கூட்டராக இருப்பதற்கு மிகுந்த வாய்ப்பு உள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்திய நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் டீஸர் செய்யப்பட்டுள்ள இந்த படங்கள் ஹோண்டாவின் புதிய பிராண்டினை குறிக்கின்றது.

ஹோண்டா நாவி ஸ்கூட்டரில் 8.50 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 10.15 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 125சிசி ஸ்கூட்டராக இருக்கலாம். ஆக்டிவா 125 ஸ்கூட்டர் 125சிசி பிரிவில் விற்பனையில் இருந்தாலும் புதிய 125சிசி பிரிமியம் பிராண்டாக நாவி உருவாகலாம்.

சுசூகி அசெக்ஸ் 125 , ஸ்விஸ் 125 , வெஸ்பா 125 வரிசை மற்றும் வரவிருக்கும் ஹீரோ 125சிசி ஸ்கூட்டர் போன்றவைக்கு போட்டியாக நாவி ஸ்கூட்டர் விளங்கலாம். இந்த வருடத்தில் ஹோண்டா இருசக்கர பிரிவு மாதம் ஒரு மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 யில் நாவி ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது.

 

Share