ஹோண்டா BR-V எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

இந்தியாவில் ஹோண்டா BR-V எஸ்யூவி கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 7 இருக்கைகளை கொண்ட பிஆர் வி எஸ்யூவி காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு மத்தியில் போட்டியை ஏற்படுத்தும்.

BR-V என்றால் Bold Runabout Vehicle என்பது விரிவாக்கம் , 3 வரிசைகளுடன் மொத்தம் 7 இருக்கைகளை கொண்டுள்ள ஹோண்டா பிஆர் வி காரில் பல நவீன வசதிகளுடன் பாதுகாப்பு அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரியோ, அமேஸ் கார்களின் தளத்திலே உருவாகப்பட்டுள்ள பிஆர் வி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்கும். 120 hp ஆற்றல் மற்றும் 145 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மேலும் 100 hp மற்றும் 200 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் போன்றவற்றை பெற்றிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்சினை பெற்றிருக்கலாம்.

முகப்பில் அகலமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் லோகோவை பெற்றுள்ள பிஆர்வி காரின் முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகள் போன்றவை சிறப்பாக அமைந்து கம்பீரமான தோற்றத்தினை வழங்குகின்றது. 4455மிமீ நீளம் , அகலம் 1735மிமீ மற்றும் உயரம் 1635மிமீ பெற்றுள்ளது. மேலும் வீல்பேஸ் 2660மிமீ மற்றும் 200மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றுள்ளது.

உட்புறத்தில் 6.0 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , பிரியோ அமேஸ் கார்களை போன்ற டேஸ்போர்டு , யூஎஸ்பி , ஆக்ஸ், பூளூடூத் வசதிகள் மேலும் முன்பக்க இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் இபிடி போன்றவை அனைத்து வேரியண்டிலும் இடம்பெற்றிருக்கும்.

க்ரெட்டா , டஸ்ட்டர் , ஸ்கார்ப்பியோ மற்றும் டெரானோ போன்ற எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக ஹோண்டா BR-V விளங்கும்.

 

Share