Site icon Automobile Tamilan

மாருதி வேகன் ஆர் எம்பிவி வருகை – ஆட்டோ எக்ஸ்போ 2016

7 இருக்கை கொண்ட மாருதி வேகன் ஆர் காரின் எம்பிவி மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வருவது உறுதியாகியுள்ளது. பெட்ரோல் , சிஎன்ஜி மற்றும் டீசல் என மூன்று விதமான ஆப்ஷனில் விற்பனைக்கு வரலாம்.

மாருதி வேகன் ஆர்

கடந்த 2013 இந்தோனேசியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த வேகன் ஆர் 7 இருக்கை மாடல் சாதரன வேகன் ஆர் மாடலை விட 101 மிமீ கூடுதலான நீளம் கொண்டதாக எம்பிவி மாடல் விளங்கும்.  வீல் பேசில் எந்த மாற்றங்களும் இல்லாமல் மூன்றாவது வரிசை சேர்க்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

செலிரியோ காரில் உள்ள அதே  45Bhp ஆற்றல் வழங்கும் 792cc டீசல் என்ஜின் ஆப்ஷன் பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் 1.0 லிட்டர் கே வரிசை பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வர வாய்ப்பு உள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனில்  வரக்கூடும்.

சாதரன வேகன் ஆர் மாடலை விட ரூ.1 லட்சம் வரை விலை கூடுதலாக இருக்கலாம் என தெரிகின்றது.  வேகன் ஆர் எம்பிவி விலை ரூ. 5 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரலாம்.

டெல்லியில் பிப்ரவரி மாதம்நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி வேகன் ஆர் காட்சிக்கு வருகின்றது. அதனை தொடர்ந்து விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வரலாம்.

Exit mobile version