Categories: Auto Show

2017 கேடிஎம் டியூக் பைக்குகள் நவம்பர் 8ல் அறிமுகம்

வருகின்ற நவம்பர் 8ந் தேதி 2017 கேடிஎம் டியூக் அணிவரிசை பைக்குகள் இத்தாலியின் EICMA 2016 ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் கேடிஎம் டியூக்  125 , டியூக் 200 , டியூக் 390 மற்றும் புதிய டியூக் 800 பைக்குகள் அறிமுகம் செய்யப்படலாம்.

வெளியிடப்பட்டுள்ள டீஸர் வீடியோ வாயிலாக கேடிஎம் டியூக் அணிவரிசை பைக்குகள் முழுதாக வெளிவரும் வாய்ப்புகள் உள்ளது. புதிய மாடல்கள் வருவதனை ஓட்டி புதிய மைக்ரோ தளத்தை கேடிஎம் இயக்க தொடங்கியுள்ளது. (www.ktmdukes.com)

மேம்படுத்தப்பட்ட புதிய கேடிஎம் டியூக் 200 , டியூக் 390 பைக்குகள் சிறப்பான வடிவ தாத்பரியங்களை பெற்றதாகவும் எஞ்சின் பவர் அதிகரிக்கப்பட்ட மாடலாகவும் விளங்கும். மேலும் புதிதாக வரவுள்ள 800சிசி பேரலல் ட்வீன் எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்டீரிட்ஃபைட்டர் மாடலும் வரவுள்ளது.

அனைத்தும் மாடல்களிலும் எல்இடி விளக்குகள் , டிஎப்டி டிஸ்பிளே , மேலும் டியூக் 390 பைக்கில் டிஎஃப்டி திரையுடன் ஸ்மார்ட்போன் ஆதரவு மற்றும் நேவிகேஷன் போன்றவற்றை பெற்றிருக்கும். வருகின்ற 8ந் தேதி EICMA 2016 ஷோ அரங்கில் கேடிஎம் டியூக் அணிவரிசை வெளியாக உள்ளது.

Share
Published by
MR.Durai
Tags: KTM