வரும் மார்ச் 5 ஆம் தேதி துவங்க உள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் வெளியிட உள்ள சிறிய ரக எஸ்யூவி மாடலின் முதல் டீசரை டொயோட்டா வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த மாடல் ஐரோப்பா சந்தையில் வெளியாக உள்ளது.
விற்பனையில் கிடைத்து வருகின்ற சிஹெச் ஆர் எஸ்யூவிக்கு கீழாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மாடலில் யாரீஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினையும் பெற உள்ளது. இந்த மாடலை பொறுத்தவரை TNGA-B பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு ஹைபிரிட் பவர் ட்ரெயின் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பெற உள்ளது.
இந்திய சந்தைக்கு சிறிய எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடுவது குறித்து எந்த தகவலும் இல்லை. அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விட்டாரா பிரெஸ்ஸா காரின் டொயோட்டா வெர்ஷன் வெளியாக உள்ளது.