பிரசத்தி பெற்ற இரு சக்கர வாகன கண்காட்சி இத்தாலி மிலன் நகரில் நடைபெற உள்ள இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சி 2019 அரங்கில் முற்றிலும் புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக், தண்டர்பேர்டு உட்பட 650சிசி ஹிமாலயன் போன்ற மாடல்கள் காட்சிப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட மாடல் KX கான்செப்ட் மாடலின் மேம்பட்ட மாடலும் காட்சிக்கு வர வாய்ப்புகள் உள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்ற முற்றிலும் மேம்பட்ட புதிய கிளாசிக் 350, கிளாசிக் 500 , தண்டர்பேர்டு 350, தண்டர்பேர்டு 500 மற்றும் தண்டர்பேர்டு X ஆகியவற்றுடன் அட்வென்ச்சர் ரக 650சிசி ஹிமாலயன் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இதனை என்ஃபீல்டு உறுதிப்படுத்தவில்லை.
பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜினை பெற உள்ள புதிய மாடல்கள் பல்வேறு நவீனத்துவமான வசதிகளுடன் சிறப்பான ரைடிங் திறன் மேம்பட்டு அதேநேரம் பைக்கின் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.
இதுதவிர இந்த ஆண்டு EICMA அரங்கில் சில கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்தவும், பல்வேறு கஸ்டமைஸ்டு பைக்குகளை காட்சிக்கு கொண்டு வரலாம். இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் செவ்., 5 நவ., 2019 – ஞாயி., 10 நவ., 2019 வரை இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சி நடைபெற உள்ளது.