நவீனத்துவமான நிசான் ஆரியா EV கான்செப்ட் அறிமுகம் – 2019 டோக்கியோ மோட்டார் ஷோ

nissan ariya ev

நிசான் மோட்டார் நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியிட உள்ள எலெக்ட்ரிக் க்ராஸ்ஓவர் காரின் கான்செப்ட் மாடலை நிசான் ஆரியா என்ற பெயரில் 46வது டோக்கியா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்துள்ளது.

எதிர்காலத்தில் வரவுள்ள எலக்ட்ரிக் காருக்கான இந்த கான்செப்ட் மாடலின் பிளாட்ஃபாரம் ரெனால்ட்-நிசான்-மிட்ஷூபிஷி நிறுவனங்களின் கூட்டு எலெக்ட்ரிக் ஒன்லி தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த காரின் பிளாட்ஃபாரம் பல்வேறு மாறுபட்ட வகை கட்டுமானம், வடிவம், மோட்டார் மற்றும் பேட்டரி பேக்குகளுக்கு ஏற்ப செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ProPILOT 2.0 தானியங்கி நுட்பம் இடம்பெற உள்ளது.

நிசானின் அரியா கான்செப்ட் முந்தைய மின்சார கான்செப்ட்களான imx மற்றும் imk போன்றவற்றிலிருந்து உந்துதலை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் மெல்லிய எல்இடி விளக்கு கிரிலில் இணைக்கப்பட்டு ஒளிரும் வகையிலான லோகோவுடன், தனது வி – வடிவ பாரம்பரிய கிரில் அமைப்பில் சற்று மேம்பட்ட மாற்றத்தை இந்த கான்செப்ட் பெற்றுள்ளது.  பக்கவாடு அமைப்பு மற்றும் பின்புற எல்இடி டெயில் விளக்குகள் நேர்த்தியாக உள்ளது. இந்த காரின் நீளம் விற்பனையில் உள்ள எக்ஸ்-ட்ரையில் மாடலுக்கு இணையானதாக உள்ளது.

இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை, மிகவும் குறைவான கோடுகளை பெற்ற நீட் டிசைன் டேஸ்போர்ட், கன்சோலில் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் கிளஸ்ட்டர் என பல்வேறு மேம்பாடுகளுடன் மிகவும் தாராளமாக அமரும் வகையில் இருக்கை மற்றும் இடவசதியை பெற்றிருக்கும்.

மேலும், நிசான் தனது சமீபத்திய செமி ஆட்டோமேட்டிக் அமைப்புகளையும் ஆரியாவுடன் காட்சிப்படுத்தியுள்ள. இந்த எஸ்யூவியின் ப்ரோ பைலட் 2.0 தொழில்நுட்பம் மிக சிறப்பான முறையில் ஓட்டுநருக்கு லேண் அசிஸ்ட் உட்பட பல்வேறு தரவுகளை கொண்டு மிக இலகுவாக கையாளும் வகையில் செயற்படுத்த உள்ளது.

முழுமையான மின்சார காராக வரவுள்ள நிசான் ஆரியா EV கான்செப்ட்டில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மிக சிறப்பான வகையில் ஆல் வீல் டிரைவ் அம்சத்தை வழங்குவதுடன் 300 மைல் அல்லது 482 கிமீ ரேஞ்சு தரவல்ல மாடலாக விளங்க உள்ளது. சர்வதேச அளவில் 2021 ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் விற்பனைக்கு வெளிவரலாம்.

Nissan Ariya Concept EV Gallery

Exit mobile version