கோவாவில் தொடங்கியுள்ள இந்தியன் பைக் வீக் விழாவில் டுகாட்டி 959 பனிகேல் சூப்பர் பைக் ரூ.14.04 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை முதல் இந்திய சந்தையில் 959 பனிகேல் பைக் கிடைக்கும்.
மிகவும் பிரசத்தி பெற்ற டுகாட்டி 899 பனிகேல் பைக்கின் வெற்றியை தொடர்ந்து அந்த மாடலுக்கு மாற்றாக நடுத்தர ரக சூப்பர் பைக் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 959 பனிகேல் பைக்கில் 157 குதிரை சக்தி வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தற்பொழுது முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள பனிகேல் 959 பைக்கிற்கு டெல்லி , குர்கான் , மும்பை மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் டுகாட்டி விற்பனையகங்கள் உள்ளது. மேலும் இந்த வருடத்தில் கூடுதலாக சில மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
1299 பனிகேல் பைக்கின் தோற்ற உந்துதலில் மிக சிறப்பான ஸ்டைலிங்கான தோற்றத்துடன் விளங்கும் பனிகேல் 959 பைக்கில் 157 bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 955சிசி L ட்வீன் சூப்பர்குவாட்ரோ என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 107 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூரோ 4 மாசு விதிகளுக்கு உட்பட்ட என்ஜினாகும்.
இரட்டை புகைப்போக்கிகள் மிக ஸ்டைலிசானஇரட்டை பிரிவு முகப்பு விளக்குகளுடன் நேர்த்தியாக் முழுதும் அலங்கரிக்கப்பட்ட டுகாட்டி 959 பனிக்கேல் பைக் இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.
டுகாட்டி 959 பனிக்கேல் பைக் விலை ரூ.14.04 லட்சம் ( எக்ஸ்ஷோரூம் டெல்லி)
ஹீரோவின் மிகவும் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் ஜூம் 125R சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள்…
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் மாடலாக வின்ட்சர் இவி ரூ.9.99…
125சிசி சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டெஸ்டினி 125 ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒரு விற்பனை எண்ணிக்கை…
இந்தியாவில் BYD நிறுவனம் தனது இ6 மாடலை புதிய இமேக்ஸ் 7 என்ற பெயரில் விற்பனைக்கு அக்டோபர் முதல் வாரத்தில்…
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு மார்ச் 2025ல் வெளியாகும் என…
நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மாடலை அடுத்த சில மாதங்களுக்குள்…