Site icon Automobile Tamilan

புதிய சுஸூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் மார்ச் 15 முதல்

வரும் மார்ச் 15ந் தேதி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சுஸூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட மாடலாக சுஸூகி ஆக்செஸ் 125 வரவுள்ளது.

புதிய சுஸூகி ஆக்செஸ் ஸ்கூட்டர் முந்தைய மாடலை விட அதிக மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டு சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் (SEP – Suzuki ECO Performance) நுட்பத்தினை பெற்றுள்ளதால் தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட சுமார் 20 % வரை மைலேஜ் கூடுதலாக தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட 8.7 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 124சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 10.2 Nm ஆகும்.

மேலும் படிக்க ; 2 லட்சம் விலை குறைந்த சுஸூகி ஹயபுஸா

மேம்படுத்தப்பட்ட மாடலில் அதிகப்படியான இருக்கையின் அடியில் ஸ்டோரேஜ் வசதி , முன்பக்க பிரேக் டிஸ்க் ஆப்ஷன் , பல தகவல்களை வழங்கும் இன்ஸ்டூருமென்ட் கன்சோல் , முப்பரிமான எம்பளம் , குரோம் பூச்சுகளை பெற்றுள்ளது.

125சிசி பிரிவில் மிக நீளமான இருக்கை அமைப்பினை பெற்ற ஸுகூட்டராக ஆக்செஸ் 125 விளங்கும். இதன் 1870மிமீ , அகலம் 655மிமீ மற்றும் உயரம் 1160 மிமீ ஆகும். மேலும் வீல்பேஸ் 1265 மிமீ ஆகும்.

Exit mobile version