Site icon Automobile Tamilan

பெனெல்லி டிஎன்டி 600i ஏபிஎஸ் மாடல் அறிமுகம்

ரூ.5.73 லட்சம்  விலையில் பெனெல்லி டிஎன்டி 600i ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெனெல்லி  டிஎன்டி 600i மற்றும்  டிஎன்டி 600GT ஏபிஎஸ் பொருத்தப்பட்ட மாடல்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்தது.

டிஎஸ்கே பெனெல்லி நிறுவனம் தன்னுடைய அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக டிஎன்டி600ஐ பைக்கில் அறிமுகம் செய்துள்ளது. பெனெல்லி பைக்கின் மற்ற மாடல்களான டிஎன்டி 600ஜிடி , டின்டி 25 போன்ற மாடல்களிலும் சுவிட்சபிள் ஏபிஎஸ் இடம்பெற்றிருக்கும்.

ஸ்போர்டிவ் நேக்டு பைக்காக உள்ள  பெனெல்லி TNT600i பைக்கில் 85 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 600சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 55என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.  சுவிட்சபிள் ஏபிஎஸ் பிரேக் மாடல் வந்துள்ளதால் ஏபிஎஸ் இல்லாத மாடலும் தொடரும் என தெரிகின்றது. முன்பக்க டயரில் 320மிமீ இரட்டை டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

700க்கு மேற்பட்ட பெனெல்லி TNT 600ஐ மாடல் இதுவரை விற்பனை ஆகியுள்ள நிலையில் ஏபிஎஸ் மாடல் வந்துள்ளது. சிறப்பான வளர்ச்சியை பெனெல்லி அடைந்து வருகின்றது. சவலான விலையில் சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது.

Exit mobile version