Site icon Automobile Tamilan

டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் அறிமுக தேதி விபரம்

வருகின்ற மே 1ந் தேதி இந்தியாவில் 2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் மாடல் விற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்வேறு புதிய அம்சங்களை பெற்றதாக வந்துள்ள மான்ஸ்டர் 821 பைக்கில் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக்

புதிய டுகாட்டி மான்ஸ்டர் பைக் முந்தைய மாடலை விட ஆற்றல் 2 ஹெச்பி மற்றும் 3 என்எம் வரை குறைக்கப்பட்டுள்ளது. புதிய பைக்கில் 111 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 821cc, 90- டிகிரி கோண வி ட்வீன் எஞ்சின் பொருத்தப்பட்டு, அதிகபட்சமாக 86 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.

மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சத்தை பெற்று விளங்கும் மானஸ்டர் 821 மாடலில் டிஎஃப்டி இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், டுகாட்டி பாதுகாப்பு பேக், மூன்று மாறுபாடுகளை பெற்ற போஸ் ஏபிஎஸ் பிரேக், டிராக்‌ஷன் கன்ட்ரோல் , அர்பன், டூரிங் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான ரைடிங் மோடினை பெற்று விளங்குகின்றது.

320 மிமீ டுயல் டிஸ்க் பிரெம்போ பிரேக் முன்புற டயரிலும், பின்புற டயரில் 245 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்று முன்புறத்தில் 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்குடன் , பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை கொண்டிருக்கும்.

இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கு குறைந்த விலையில் வெளியாக உள்ள டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் , இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ட்ரையம்ப் டிரிபிள் ஆர்எஸ், சுஸூகி GSX-S750, மற்றும் கவாஸாகி Z900 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version