இந்தியாவில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்ற பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் மாடலில் ஒன்றான ஹயபுசா பைக்கின், 2019 சுசூகி ஹயபுசா பைக் மாடலுக்கு ரூ.1 லட்சம் செலுத்தி டீலர் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சர்வதேச அளவில் ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுசூகி ஹயபுசா GSX1300R பைக் விற்பனையை கடுமையான மாசு விதிகளுக்கு உட்பட்டு சுசூகி நிறுத்தியதை தொடர்ந்தும் இந்திய சந்தையில் ஹயபுஸா விற்பனை செய்யப்பட உள்ளது.
வருகின்ற ஜனவரி 20, 2019 முதல் இந்தியாவில் டெலிவரி தொடங்கப்பட உள்ள ஹயபுசா பைக்கில் விற்பனையில் உள்ள மாடல்களின் வசதியை பெற்றிருப்பதுடன் ஏரோடைனமிக் வசதி, டிரைவ் மோட் செலக்டர் , பிரம்போ மோனோபிளாக் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட வசதிகளை பெற்று விளங்குகின்றது.
மிகவும் சக்திவாய்ந்த 1340சிசி இடபெயர்வு கொண்ட என்ஜின் அதிகபட்சமாக 199.7hp பவர் மற்றும் 155Nm டார்க் பெற்று விளங்குகின்றது. இந்தியாவில் உள்ள குருகான் ஆலையில் சுசுகி ஹயபுஸா பைக் பாகங்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.
2019 சுசுகி ஹயபுஸா பைக் விலை ரூ. 13.59 லட்சம் (விற்பனையக விலை டெல்லி)
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…