2023 சுசூகி அவெனிஸ், அக்செஸ் 125 விற்பனைக்கு அறிமுகம்

suzuki avenis price

இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2, E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் சுசூகி நிறுவனம் தனது ஆக்செஸ் 125, அவெனிஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 என மூன்று மாடல்களையும் புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய அவெனிஸ் ஸ்கூட்டரில் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ என இரு புதிய வண்ணங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடலில் புதிய பேர்ல் மேட் ஷேடோ கிரீன் நிறத்தையும் சேர்த்துள்ளது.

2023 சுசூகி அவெனிஸ்

பொதுவாக மூன்று ஸ்கூட்டர்களிலும் 8.5பிஎச்பி  பவர் மற்றும் 10 என்எம் டார்க்கை வழங்கும் 124சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுசூகி அக்செஸ் 125 ஸ்கூட்டர் விலைகள் ரூ. 79,400 முதல் ரூ.89,500 வரை அமைந்துள்ளது.  Avenis மாடல் விலை ரூ.92,000 மற்றும் ரேஸ் பதிப்பிற்கு ரூ.92,300 செலுத்த வேண்டும். கடைசியாக, பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ரைடு கனெக்ட் எடிஷன் விலை முறையே ரூ.93,000 மற்றும் ரூ.97,000 ஆகும்.

அனைத்து ஸ்கூட்டர்களின் விலைகளும் வேரியண்ட்டை பொறுத்து ரூ.2,000-3,000 வரை உயர்ந்துள்ளன.

Exit mobile version