Bike News

110cc ஹோண்டா டியோ விற்பனைக்கு அறிமுகமானது

ஹோண்டாவின் பிரபலமான 2025 டியோ 110 ஸ்கூட்டரில் 4.2 TFT கிளஸ்ட்டரை பெற்று சில கனெக்ட்டிவிட்டியுடன் OBD2B ஆதரவு பெற்ற எஞ்சினை கொண்டுள்ளது.

முந்தைய மாடலின் அடிப்படையான டிசைனில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மட்டும் பெற்றதாக வந்துள்ளது. OBD2B இணக்கமான 109.51cc, ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 7.84hp (5.85 kW) 8000 rpm-லும் மற்றும் டார்க் 9.03 Nm ஆனது 5250லும் வெளிப்படுத்துகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

நிகழ் நேரத்தில் மைலேஜ் , டிரிப் மீட்டர், இக்கோ இன்டிகேட்டர் மற்றும் பெட்ரோல் இருப்பை கணக்கிட்டு பயணிக்கும் தொலைவினை அறியும் வசதியுடன் 4.2-இன்ச் TFT டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் USB டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆப்ஷன் உள்ளது.

சிவப்பு, கருப்பு, கிரே மற்றும் கருப்பு உடன் கிரே என நான்கு விதமான நிறங்களை பெற்று STD மற்றும் DLX என இரண்டு விதமான வேரியண்ட் ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.

  • Dio STD: Rs. 74,930
  • Dio DLX: Rs. 85,648

(ex-showroom Delhi)

Share
Published by
Automobile Tamilan Team