Automobile Tamilan

ஹண்டர் 350-யின் வேரியண்ட் வாரியான வசதிகள்..!

 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350

ராயல் என்ஃபீல்டின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஹண்டர் 350 மாடலில் உள்ள ரெட்ரோ மற்றும் மெட்ரோ என இரு வேரியண்டில் மொத்தமாக 6 நிறங்களுடன் 350சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

Retro Hunter

ரூ.1.50 லட்சத்தில் துவங்குகின்ற பேஸ் ரெட்ரோ ஹண்டர் வேரியண்டில் ஒற்றை ஃபேக்ட்ரி பிளாக் என்ற நிறத்தை மட்டும் பெற்று இருபக்க டயரிலும் ஸ்போக்டூ வீல் ட்யூப் டயர் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாலஜென் ஹெட்லைட் கொண்டு 300 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்பக்கத்தில் 130மிமீ டிரம் வழங்கப்பட்டு ஒற்றை சேனல் ஏபிஎஸ் உள்ளது.

Metro Hunter

ரூ.1.77 லட்சத்தில் ஒற்றை நிற வண்ணங்களை பெற்ற டாப்பர் கிரே, ரியோ வெள்ளை , கூடுதலாக டூயல் டோன் நிறங்களை பெற்ற ரீபெல் ப்ளூ, லண்டன் ரெட், டோக்கியா பிளாக் என மூன்று நிறங்ளை பெற்று ரூ.1.82 லட்சம் விலையில் கிடைக்கின்றது.

அலாய் வீல் கொடுக்கப்பட்டு டீயூப்லெஸ் டயர், 300 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்பக்கத்தில் 270மிமீ டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.

டிஜி அனலாக் கிளஸ்ட்டருடன் டிரிப்பர் நேவிகேஷன் கூகுள் மேப் ஆதரவுடன் இணைக்கப்பட்டு, எல்இடி ஹெட்லைட், டைப் சி சார்ஜிங் போர்ட் போன்றவை பெற்றுள்ளது.

மற்ற புதிய மாற்றங்கள்..!

தொடர்ந்து 349cc, ஒற்றை சிலிண்டர் லாங் ஸ்ட்ரோக் ஏர் கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டாலும், 20.2PS பவர் மற்றும் 27Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் கூடுதலாக ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.

பின்புற சஸ்பென்ஷன் முன்பை விட மேம்படுத்தப்பட்டு புதிய சஸ்பென்ஷனுடன் இருக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஹேண்டில்பார், கூடுதலாக 10 மிமீ வரை கிரவுண்ட் கிளியரண்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தற்பொழுது 160 மிமீ ஆக கிரவுண்ட் கிளியரண்ஸ் உள்ளது.

(Ex-Showroom Tamil Nadu)

Exit mobile version