ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரோட்ஸ்டெர் ஹண்டர் 350 பைக்கின் 2024 மாடலின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
2025 Royal Enfield Hunter 350
ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாக ரூ.1.50 லட்சத்தில் துவங்குகின்ற ஹண்டர் 350 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள J-சீரிஸ் என்ஜின் மிக சிறப்பானதாக விளங்குகின்றது.
349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டு சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது. குறிப்பாக மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் அனுபவத்தை வழங்கும் உள்ள ஹண்டரின் மைலேஜ் லிட்டருக்கு 36.5 கிமீ தரக்கூடியது என ARAI சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
ட்வீன் டவுன்டீயூப் ஸ்பின் ஃபிரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 பைக்கின் முன்புறத்தில் 300 mm டிஸ்க் பிரேக் மற்றும் 270 mm டிஸ்க் பிரேக் பெற்றுள்ள மெட்ரோ வேரியண்ட் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டதாகவும், குறைந்த விலை ரெட்ரோ வேரியண்ட் பின்பறத்தில் 153 மிமீ டிரம் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மட்டும் கொண்டுள்ளது.
ஹண்டர் 350 மெட்ரோ வேரியண்டில் எல்இடி ஹெட்லைட் பெற்று 110/70-17 மற்றும் பின்புறத்தில் 140/70 -17 பெற்று அலாய் வீல் உட்ன் ட்யூப்லெஸ் டயர் கொண்டுள்ளது. அடுத்த ரெட்ரோ வேரியண்ட் ஸ்போக் வீல் டீயூப் டயருடன் 100/80-17 மற்றும் பின்புறத்தில் 120/80-17 டயர் உள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது.
ஆர்இ ஹண்டர் 350 பைக்கின் பரிமாணங்கள் 2055mm நீளம், 800mm அகலம் மற்றும் 1,055mm உயரம் பெற்றதாக அமைந்துள்ளது. 1370mm வீல்பேஸ் பெற்று 1mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. 13 லிட்டர் பெட்ரோல் கொண்ட மாடலின் எடை 181 கிலோ ஆகும்.
யூஎஸ்பி சார்ஜர் போர்ட், வட்ட வடிவத்திலான டிஜி அனலாக் முறையிலான கிளஸ்ட்டரை பெற்று கூடுதலாக ப்ளூடூத் இணைப்பின் மூலம் டர்ன் பை டர்ன் டிரிப்பர் நேவிகேஷனை பெற்றுள்ள ஹண்டர் 350 மாடலில் மொத்தமாக 8 நிறங்களை பெற்றுள்ளது.
- Retro Factory Black ₹1,49,900
- Mid Dapper Grey, Rio white – ₹ 1,76,750
- Top Rebel Blue, Tokyo Black, London red ₹1,81,750
(Ex-Showroom Tamil Nadu)
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 நுட்பவிபரங்கள்
Royal Enfield Hunter 350 | Metro/Retro |
என்ஜின் | |
வகை | Air Cooled, SOHC, 4 stroke , 2 valve |
Bore & Stroke | 75 x 85.8mm |
Displacement (cc) | 349 cc |
Compression ratio | 9.5:1 |
அதிகபட்ச பவர் | 20.2 bhp at 6,100 rpm |
அதிகபட்ச டார்க் | 27 Nm at 4,000 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (EFI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | ட்வீன் டவுன்டீயூப் ஸ்பின் |
டிரான்ஸ்மிஷன் | 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்பக்கம் | ட்வீன் ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | 300 mm டிஸ்க் (ABS) |
பின்புறம் | 270 mm டிஸ்க் /135 mm டிரம் |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய்/ஸ்போக் |
முன்புற டயர் | 111/70 -17M/C (52P) ட்யூப்லெஸ் / 100/80 -17 ட்யூப் |
பின்புற டயர் | 140/70 -17M/C (66P) ட்யூப்லெஸ் / 120/80-17 ட்யூப் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V 8.0Ah |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2,055 mm |
அகலம் | 800 mm |
உயரம் | 1,055 mm |
வீல்பேஸ் | 1,370 mm |
இருக்கை உயரம் | 790 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 160 mm |
எரிபொருள் கொள்ளளவு | 13 litres |
எடை (Kerb) | 181kg/178 Kg |
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 நிறங்கள்
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் ரெட்ரோ ஹண்டர்: ஃபேக்டரி பிளாக்
மெட்ரோ ஹண்டர் ஒற்றை டோன் நிறங்கள்: ரியோ ஒயிட், டாப்பர் கிரே, டூயல் டோன் நிறங்களாக டோக்கியோ பிளாக், லண்டன் ரெட், ரெபெல் ப்ளூ என மொத்தமாக 6 நிறங்கள்
Royal Enfield Hunter 350 on-Road Price in Tamil Nadu
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருநெல்வேலி, ஓசூர் மற்றும் தூத்துக்குடி உட்பட இந்த விலை மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- Retro Factory Black ₹ 1,79,522
- Mid Dapper Grey, Rio white – ₹ 2,09,889
- Top Rebel Blue, Tokyo Black, London red ₹ 2,15,987
(on-road Price Tamil Nadu)
- Retro Factory Black ₹1,63,414
- Mid Dapper Grey, Rio white – ₹ 1,89,050
- Top Rebel Blue, Tokyo Black, London red ₹1,92,650
(on-road Price Pondicherry)
Royal Enfield Hunter 350 rivals
350சிசி என்ஜின் பிரிவில் இல்லையென்றாலும், கிளாசிக் 350, புல்லட் 350 ஆகியவற்றுடன் டிவிஎஸ் ரோனின், ஹீரோ மேவ்ரிக் 440 ஆகியவற்றை ஹண்டர் 350 பைக் எதிர்கொள்ளுகின்றது.
Faqs about Royal Enfield Hunter 350
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் என்ஜின் விபரம் ?
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் மாடல் அதிகபட்சமாக 6,100 rpmல் 20.2 bhp பவருடன் 27 Nm டார்க் ஆனது 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 டாப் ஸ்பீடு எவ்வளவு ?
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 டாப் ஸ்பீடு 114 kmph
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன்-ரோடு விலை ?
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஆன் ரோடு விலை ரூ.1.75 - ரூ.2.08 வரை கிடைக்கின்றது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?
ஹண்டர் 350 பைக்கின் சராசரி மைலேஜ் 34KMPL ஆகும்.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?
350சிசி என்ஜின் பிரிவில் இல்லையென்றாலும், கிளாசிக் 350, புல்லட் 350 மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 உள்ளன.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வேரியண்ட் விபரம் ?
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டு ஸ்போக் வீல் ஒற்றை நிறம் பெற்ற ரெட்ரோ ஃபேக்டரி மற்றும் அலாய் வீல் பல நிறங்கள் உள்ள மெட்ரோ வேரியண்ட் என ஹண்டர் 350ல் இரண்டு உள்ளது.
Royal Enfield hunter 350 Photo gallery