மிக நீண்ட எதிர்பார்ப்புகள் மற்றும் காத்திருப்புக்கு விடை கொடுக்கும் வகையில் புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகுவதனை உறுதி செய்யும் வகையில் டீசர் வெளியாகியுள்ளது.
J-பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடலான மீட்டியோர் 350 மாடலை தொடர்ந்து இரண்டாவது மாடலாக கிளாசிக் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. கடந்த பல மாதங்களாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
விற்பனையில் உள்ள மீட்டியோரில் இடம்பெற்றிருக்கின்ற புதிய லாங் ஸ்ட்ரோக் ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதே என்ஜினை கிளாசிக் 350 பெற உள்ளது.
கிளஸ்ட்டர் அமைப்பில் கூடுதலாக, டிஜிட்டல் அமைப்பு உட்பட டிரிப்பர் நேவிகேஷன் பெற்றதாக விளங்குகின்றது. மீட்டியோர் 350, ஹிமாலயன் பைக்கில் உள்ள கூகுள் ஆதரவுடன் ஸ்மார்ட்போன் ப்ளூடூத் இணைப்பதனால் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி கிளாசிக்கிலும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டுள்ள பகுதியில் ஈக்கோ மோட், டிரீப்மீட்டர், ஓடோமீட்டர், எரிபொருள் அளவு, மற்றும் கடிகாரம் ஆகியவை இடம்பெற்றிக்கலாம்.
2022 புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.90 லட்சம் முதல் துவங்கலாம்.