ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக ஃபேக்டரி கஸ்டம் (Factory Custom) என்று பெயரில் பிரத்தியோகமான கஸ்டமைஸ் வசதிகளை 2024 கிளாசிக் 350 மாடல் மூலம் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட கிளாசிக் 350 மாடல் பல்வேறு புதிய நிறங்கள் சிறிய அளவில் கூடுதலாக வசதிகள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட செப்டம்பர் 1 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது.
Factory Custom என்பதின் நோக்கமே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வாரண்ட்டி தொடர்பான எவ்விதமான சிக்கல்களையும் எதிர்கொள்ளாமல் வாடிக்கையாளர்கள் தங்கள் மாடலை விருப்பம் போல கஸ்டம் செய்து கொள்ளும் ஒரு அம்சமாகும். குறிப்பாக இந்த கஸ்டம் வசதிகளின் மூலம் விருப்பமான பல்வேறு நிறங்களை தேர்ந்தெடுக்கும் வசதி, 2D/3D ஸ்டிக்கரிங், இருக்கையில் உள்ள தையல் மற்றும் கூடுதலான ஆக்செரீஸ் ஆனது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உதிரிபாகங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
சேஸ் உட்பட எந்தெந்த பாகங்கள் எந்தெந்த நிறத்தில் இருக்க வேண்டும் மேலும் என்னென்ன பாடி கிராபிக்ஸ், ஸ்டிக்கரிங் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட அனைத்தையும் நாம் ஆன்லைனில் வழியாக தேர்ந்தெடுத்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தினால் இவற்றை கஸ்டமைஸ் செய்து கேட்டுக்கொண்டால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு 90 நாட்களுக்குள் டெலிவரி வழங்க ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2024 கிளாசிக் 350 மாடல் விலை மற்றும் கஸ்டைமைஸ் தொடர்பான கட்டணங்கள் என அனைத்து விபரங்களையும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.