2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அறிமுகம்

royal enfield classic350

ராயல் என்ஃபீல்டின் பிரபலமான பெற்ற ரெட்ரோ ஸ்டைல் மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350 பைக்கில் புதிதாக 7 நிறங்கள் மற்றும் நவீன தலைமுறைக்கு ஏற்ற எல்இடி முறையில் ஹெட்லைட், டெயில்லைட் பைலட் விளக்கு, மற்றும் டர்ன் இண்டிகேட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய கிளாசிக் 350 பைக்கில் உள்ள எல்இடி ஹெட்லைட் ஏற்கனவே கிடைக்ககின்ற ஹிமாலயன் 450, கொரில்லா 450 பைக்கில் உள்ளதை போன்று உள்ளது.

மற்ற முக்கிய மாற்றங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் மற்றும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றையும் பெறுகிறது. மெட்ராஸ் ரெட், ஜோத்பூர் புளூ, எமரால்டு, கமாண்டோ சாண்ட், பிரவுன் மற்றும் ஸ்டெல்த் ஆகிய ஏழு புதிய நிறங்களில் 2024 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் கிடைக்க உள்ளது.

தொடர்ந்து J-series என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100Rpm-ல் 20.2 bhp, 4,000Rpm-ல் 27 NM டார்க் வெளிப்படுத்தும் நிலையில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. மற்றபடி, இந்த மாடலில் முன்பக்கத்தில் 300 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 270 mm டிஸ்க் பிரேக் பெற்று தொடர்ந்து சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.93 லட்சத்தில் துவங்குகின்றது. எனவே புதிய 2024 கிளாசிக் 350 விலை ரூபாய் 1.95 லட்சத்துக்குள் துவங்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *