Automobile Tamilan

சிறந்த மைலேஜ் தரும் பஜாஜ் சிஎன்ஜி பைக் அறிமுக விபரம்

upcoming bajaj auto launches 2024

குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் உள்ள சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் முதல் பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஸ்போர்ட்டிவ் மற்றும் பிரீமியம் சந்தையில் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற பல்சர் RS400 & NS400 , எலக்ட்ரிக் சந்தையில் பஜாஜ் வெக்டார் மற்றும் சேட்டக் பிரீமியம் 2024 ஆகிய மாடல்களை வெளியிடலாம்.

Bajaj Platina CNG bike

பஜாஜ் நிறுவனம் 3 சக்கர வாகனங்களில் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி எரிபொருளுக்கு ஏற்ற மாடல்களை விற்பனை செய்யும் அனுபவத்தை கொண்டு Bruzer E101 என்றங பெயரில் தயாரித்து வருகின்றது. துவக்க நிலையில் உள்ள தயாரிப்பு பணிகளை பெற்ற சிஎன்ஜி பைக் பெட்ரோல் மாடல்களை விட மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் என்பதனால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெறும் என பஜாஜ் ஆட்டோ நம்புகின்றது.

ஆரம்ப உற்பத்தித் திட்டம் ஆண்டுக்கு சுமார் 1-1.2 லட்சம் சிஎன்ஜி பைக்குகளை உற்பத்தி செய்வதாக இருந்த நிலையில், தற்பொழுது சுமார் 2 லட்சம் யூனிட்டுகளாக உற்பத்தி செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாடதங்களில் சிஎன்ஜி பைக் மிக சிறப்பான மைலேஜ் தரும் மாடலாக வரவுள்ளது.

Bajaj Pulsar RS400, NS 400

பஜாஜ் பல்சர் வரிசையில் மிகப்பெரிய 400சிசி என்ஜின் பெற்ற ஃபேரிங் ஸ்டைல் கொண்ட பல்சர் RS400, மற்றும் நேக்டு ஸ்டைல் பெற்ற NS400 என இரு மாடல்களுடன் அதிகபட்சமாக 6 பல்சர் பைக்குகளை வெளியிட வாய்ப்புகள் 2024 ஆம் ஆண்டுக்கு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாறுபட்ட டிசைன் வடிவமைப்புடன் கூடுதலாக திறன் பெற்ற மாடல்கள் கொண்டிருக்கலாம்.

400சிசி மாடல்களுக்கு டிரையம்ப் மற்றும் கேடிஎம் 390 டியூகக் மாடலில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளலாம். 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

Bajaj Vector

ஹஸ்குவர்னா கீழ் காட்சிப்படுத்தப்பட்ட வெக்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் முன்பாக கான்செப்ட் நிலையில் காட்சிப்படுத்தப்பட்ட பொழுது  4KW எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 95 கிமீ வரை பயணிக்கும் திறனை கொண்டிருக்கலாம்.

ஆனால் உற்பத்தி நிலையில் மாடல் அதிகப்படியான பவர் வழங்குவதுடன் 100 கிமீ வேகத்துடன் 150 கிமீ ரேஞ்ச் கொண்டிருக்கலாம். பஜாஜ் இந்திய சந்தையில் 2024 ஆம் ஆண்டு இறுதியில் ரூ.2 லட்சத்துக்குள் வெளியிடலாம்.

Bajaj Chetak Premium

சேட்டக் வரிசையில் அர்பேன் 2024 மாடல் ரூ.1.15 லட்சத்தில் வெளியாகியுள்ள நிலையில் பிரீமியம் 2024  3.2kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக 126 KM ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றியளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் டாப் ஸ்பீடு 73km/hr ஆகும். மற்றபடி, பவர், டார்க் விபரங்கள் தற்பொழுது வெளியாகவில்லை.

அர்பேன் மாடலில் உள்ள எல்சிடி டிஸ்பிளே நீக்கப்பட்டு, புதிய 5 அங்குல TFT டிஸ்பிளே கொண்டிருக்கும்.  மற்றபடி, டெக்பேக் வசதியும் வழங்கப்படலாம்.

வரும் 2024 ஜனவரி மாதம் எதிர்பார்க்கப்படுகின்ற சேட்டக் பிரீமியம் விலை ரூ.1.40 லட்சத்தில் துவங்கலாம்.

Exit mobile version