பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 6 புதிய பல்சர் பைக்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக பஜாஜின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவற்றில் மிகப்பெரிய பல்சர் வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது பஜாஜ் பல்சர் வரிசையில் 125சிசி முதல் 250சிசி வரையில் நேக்டூ மற்றும் ஸ்போர்ட்டிவ் மற்றும் ஃபேரிங் என மாறுபட்ட வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Bajaj Pulsar NS 400
ராஜீவ் பஜாஜ் CNBC TV-18 அளித்த பேட்டியில் , பல்சர் பிராண்டின் கீழ் வரவிருக்கும் ஆறு புதிய வாகனங்களில் “மிகப்பெரிய பல்சரை” நாங்கள் வெளியிட உள்ளோம். இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ உத்தேசித்துள்ளது.
பஜாஜின் “மிகப்பெரிய பல்சர்” என்ற கருத்து, இன்ஜின் இடமாற்றத்தைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய பல்சரைக் குறிக்கும். தற்பொழுது, பஜாஜ் 250cc மாடல் சற்று பெரிதாக உள்ளது. . பஜாஜ் ஏற்கனவே கேடிஎம், ஹஸ்குவர்னா மற்றும் ட்ரையம்ப் உடன் என்ஜின் கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்ளுகின்றது.
ஸ்பீடு 400 மற்றும் 390 டியூக் பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினை பல்சர் NS 400 மற்றும் ஃபேரிங் ஸ்டைல் பெற்ற பல்சர் RS 400 என இரண்டும் பகிர்ந்து கொள்ளலாம். மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகலாம்.