பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS200 மற்றும் பல்சர் NS160 என இரண்டு பைக்குகளிலும் கிரே மற்றும் சிவப்பு என இரண்டு நிறங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் OBD2 மற்றும் E20 மேம்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
2023 Bajaj Pulsar NS 200 and NS160
கிரே (Pewter Grey) மற்றும் சிவப்பு (Cocktail Wine Red) என இரண்டு நிறங்களும் பல்சர் NS200 மற்றும் பல்சர் NS160 என இரண்டிலும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்தவொரு மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை.
NS160 பைக்கில் 17.03 bhp பவர் மற்றும் டார்க் 14.6 Nm வெளிப்படுத்தும் 160.3cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள மாடல் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக., NS200 பைக்கில் 24.13 bhp பவர் மற்றும் டார்க் 18.74 Nm வெளிப்படுத்தும் 199.5cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள மாடல் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
2023 Pulsar NS160 – ₹ 1,36,824
2023 Pulsar NS200 ₹ 1,49,875
(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)
பஜாஜ் பல்சர் NS200 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 1,73,675 மற்றும் 2023 பஜாஜ் பல்சர் NS160 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 1,54,675 ஆகும்.