
உலகின் மிகவும் தனித்துவமான பாரம்பரியத்தை கொண்டுள்ள மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டின் பிளையிங் பிளே எலக்ட்ரிக் பிராண்டின் முதல் மாடலான c6 விற்பனைக்கு பேட்டரி வாடகைத் திட்டத்தில் (BaaS) இதன் விலை ரூ. 1.99 லட்சத்திலும், பேட்டரியுடன் சேர்ந்து வாங்கும்போது ரூ. 2.79 லட்சத்திலும் கிடைக்கிறது.
குறிப்பாக இந்நிறுவனத்தின் முதல் மாடலையும் மிகவும் தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதுவே இந்த மாடலுக்கு மிகப்பெரும் அங்கீகாரமாகவும் மேலும் பல்வேறு சிறப்புகள் டிசைனில் புகுத்தியுள்ளது. அதே நேரத்தில் வடிவமைப்பு மற்றும் அதன் தரம் சார்ந்த முக்கிய அம்சங்கள் மற்றும் பேட்டரி அதன் கேஸிங் அமைப்பு போன்றவை என அனைத்திலுமே மிகத் தனித்துவமான கவனத்தை இந்நிறுவனம் செலுத்தியுள்ளது என்பது இதனுடைய பல்வேறு நுட்ப விபரங்களை அடிப்படையில் நாம் அறிந்து கொள்கின்றோம்.
Royal Enfield Flying Flea C6
ஃபிளையிங் ஃபிளே பைக்கில் 3.91 kWh லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டு, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 154 கிமீ வரை பயணிக்க முடியும். 20% முதல் 80% வரை சார்ஜ் ஏற வெறும் 65 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
15.4 kW எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 60 Nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதனால் வெறும் 3.7 வினாடிகளில் 0-ல் இருந்து 60 கி.மீ வேகத்தை எளிதாக எட்ட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கி.மீ ஆகும்.
3.5-இன்ச் வட்ட வடிவ டச்-ஸ்கிரீன், கூகுள் நேவிகேஷன், கார்னரிங் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் 5 ரைடிங் மோடுகள் என ஏராளமான வசதிகள் உள்ளன.
வெறும் 124 கிலோ எடையுடன் இருப்பதால், நகர நெரிசலில் வளைத்து நெளித்து ஓட்ட மிக அருமையாக இருக்கிறது. பழைய காலத்து ‘கிர்டர் ஃபோர்க்’ (Girder fork) சஸ்பென்ஷன், மெக்னீசியம் பேட்டரி கேஸிங் என இதன் டிசைன் மற்றும் உதிரிபாகங்களின் தரம் மிகச் சிறப்பாக உள்ளது.

