Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

by MR.Durai
9 July 2026, 7:26 am
in Bike News
0
ShareTweetSend

yamaha aerox electric scooter

இந்திய இருசக்கர வாகன சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனமான யமஹா தனது புதிய பிரீமியம் மாடலான ஏராக்ஸ் E (Aerox E) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விற்பனையில் உள்ள பிரபல பெட்ரோல் மாடலான ஏராக்ஸ் 155 (Aerox 155) போன்றே மிரட்டலான ஸ்போர்ட்டி டிசைனுடன் இந்த புதிய இ-ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் (Key Specs & Performance)

இந்த ஸ்கூட்டர் அதிக செயல்திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் கழற்றக்கூடிய பேட்டரி (Removable Battery) வசதியுடன் வருகிறது.

மோட்டார் பவர் : இதில் 9.4kW திறன் கொண்ட சக்திவாய்ந்த மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

அதிவேகம் : இந்த ஸ்கூட்டரில் அதிகபட்சமாக மணிக்கு 95.5 கிமீ வேகம் வரை செல்ல முடியும்.

பேட்டரி திறன்: இதில் தலா 1.5kWh திறன் கொண்பேட்டரி திறன்): இதில் தலா 1.5kWh திறன் கொண்ட இரண்டு  பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக 3kWh பேட்டரி பேக் இதில் உள்ளது.

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் IDC (Indian Driving Cycle) விதிகளின்படி 117 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வசதிகளில் இதில் Eco, Standard, மற்றும் Power என மூன்று மோடுகள் உள்ளன. இதுதவிர, உடனடியாக வேகத்தை அதிகரிக்க தற்காலிக ‘Power Boost’ வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

14-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. பாதுகாப்புக்காக இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

TFT டிஜிட்டல் டிஸ்ப்ளே மூலம் வாகனத்தின் விபரங்களை அறியலாம்.

ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி: ப்ளூடூத் மூலம் மொபைலை இணைத்து, திரையிலேயே Turn-by-Turn நேவிகேஷன், வானிலை விவரங்கள் மற்றும் கால்/எஸ்எம்எஸ் அலர்ட்களைப் பெற முடியும்.

புதிய யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 2,81,600 (Ex-showroom, Bengaluru) என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. EC-06 மாடலுக்குப் பிறகு, இந்திய சந்தையில் யமஹா அறிமுகப்படுத்தும் இரண்டாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகும்.

 

Related Motor News

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

Tags: Yamaha Aerox Electric
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan