பஜாஜ் ஆட்டோவின் சிஎன்ஜி பைக்கை தொடர்ந்து அடுத்ததாக முழுமையான 100 % எத்தனால் மூலம் இயங்கும் வகையிலான பல்சர் என்எஸ் 160 ஃபிளெக்ஸ் பைக்கினை அறிமுகம் செய்துள்ளது.
மாசு உமிழ்வினை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பெற்றோருக்கு மாற்றாக இருசக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று வடிவ எரிபொருள்களுக்கான முன் வடிவங்களை பல்வேறு நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகின்றன அந்த வகையில் ஏற்கனவே பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்கை கொண்டு வந்திருக்கின்றது.
இதை தவிர முன்பாக 2019 ஆம் ஆண்டிலேயே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் அப்பாச்சி பைக் அறிமுகம் செய்திருந்தது. ஆனால் போதுமான எத்தனால் வழங்கும் மையங்கள் இல்லாத காரணத்தாலும் வரவேற்பு பெரிதாக எதிர்பார்த்த அளவு இல்லாததாலும் இந்த மாடல் விற்பனைக்கு தொடர்ந்து வழங்கப்படவில்லை.
India Bio-Energy & Tech (IBET) Expo 2024 அரங்கில் பஜாஜ் E100 பல்சர் NS160 அறிமுகம் செய்துள்ளது ஆனால் இந்த மாடலின் தொழில்நுட்பம் சார்ந்த விபரங்களை தற்பொழுது வெளியிடவில்லை. ஆனால் இந்நிறுவனம் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த மாடல் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் சந்தையிலும் கிடைக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இயல்பாகவே எதனால் எரிபொருளானது மிகவும் அரிப்பினை ஏற்படுத்தும் வகையிலான இயல்பை கொண்டு இருப்பதனால் அதற்கு ஏற்ற வகையில் பாகங்களை வடிவமைப்பது மிக முக்கியமானது ஒன்றாக கருதப்படுகின்றது முன்பாக விற்பனையில் இருக்கின்ற அதே இன்ஜினில் எத்தனால் எரிபொருள் பயன்படுத்தும் வகையில் இந்நிறுவனம் வடிவமைத்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
எத்தனால் 100 பைக் ஆனது விற்பனைக்கு வரும்பொழுது முழுமையான விபரங்கள் வெளியாகும்.