டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இரட்டை எரிபொருள் என்ஜின் கொண்டு செயல்படும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 Fi E100 என்ற எத்தனால் மற்றும் எத்தனாலுடன் பெட்ரோல் கலந்து இயங்கும் பைக் மாடலை விற்பனைக்கு ரூ.1.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018 டெல்லி ஆட்ட எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வந்த அப்பாச்சி எத்தனால் பைக் முதற்கட்டமாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மற்றும் கர்நாடகா மாநிலங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பெட்ரோலில் இயங்கும் சாதாரன மாடலை விட ரூ.9,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்பே ஃபிளெக்ஸ் என்ஜின் கொண்ட மாடலை அரசு விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தபடி முதல் மாடலாக அப்பாச்சி எத்தனால் விற்பனைக்கு வந்துள்ளது.
எத்தனால் எரிபொருள் இந்தியாவில் கிடைக்கின்றதா ?
ஃப்ளெக்ஸ்-என்ஜின் எனப்படுவது, ஃப்ளெக்ஸ் எரிபொருள் அல்லது இரட்டை எரிபொருள் கொண்டு இயக்கப்படும் எஞ்சின் ஆகும். குறிப்பாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் எத்தனால் கொண்டு இயங்கும் வகையிலான பைக்குகள் ஆகும்.
கோதுமை வைக்கோல், நெல் வைக்கோல், மூங்கில் போன்ற பொருட்களை கொண்டு எத்தனால் தயாரிக்கப்படும் என்பதனால், ஒரு டன் நெற் வைக்கோலை கொண்டு 280 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும், மேலும் எத்தனால் ஒரு பெட்ரோல் விலையை , விட பாதியாக இருக்கும் என்பதனால் பயனாளர்களுக்கும் ஏற்றதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எத்தனால் அல்லது எத்தில் ஆல்கஹால் எனப்படுவது பெட்ரோலுக்கு இணையான அதிக ஆற்றலை உற்பத்தி செய்யாது. சராசரியாக பெட்ரோலை விட 34 சதவீதம் குறைவான பவரை எத்தனால் வெளிப்படுத்தும். எனவே இதன் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் எத்தனாலில் இயங்கும்போது கூடுதலான ஆற்றலை ஈடுகட்டுவதற்கு பெட்ரோல் பயன்படுதப்படலாம். எனவே, அப்பாச்சி எத்தனாலில் இயங்கும்போதும் எந்தவொரு ஆற்றல் இழப்பும் இருக்காது என குறிப்பிடப்படுகின்றது.
பெட்ரோலுக்கு மாற்றாக விளங்க உள்ள எத்தனால் குறைந்த செலவில் தயாரிப்பதுடன் காற்று மாசுபாட்டை பெருமளவு குறைக்கும் என்பதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இயலும் என நம்பப்படுகின்றது. எத்தனால் பயன்படுத்தி வாகனத்தை இயக்கும்போது சாதாரன பெட்ரோல் இயங்கும்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு மாசு உமிழ்வு 35 சதவீதம் வரை குறையும் என உறுதிப்படுத்துப்பட்டுள்ளது.
பெட்ரோல் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள எத்தனால் கொண்டு இயக்கப்படுகின்ற Twin-Spray-Twin-Port EFI அப்பாச்சி 200 சிசி மாடலில் 21 PS ஆற்றல் 18.1 Nm டார்க் வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எத்தனால் கொண்டு இயங்கும் அப்பாச்சிக்கு ட்வின் ஸ்பிரே ட்வின் போர்ட் EFI நுட்பம் உள்ளது. இந்த நுட்பம் மிக சிறப்பான முறையில் எரிபொருள் எரிக்கப்பட்டு 50 சதவீதம் குறைவான பென்சீன் மற்றும் பியூட்டாடையீன் வாயுக்களை வெளியேற்றும் போது அதிக ஆற்றலை வழங்குவதை உறுதி செய்கிறது.
100 சதவீத எத்தனால் அல்லது 80 சதவீத எத்தனால் 20 சதவீத பெட்ரோல் கொண்டு இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளளது.
இந்தியாவில் பிரத்தியேகமான முறையில் எத்தனால் நிலையங்கள் இதுவரை தொடங்கப்படவில்லை. இனி, தொடங்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.