மீண்டும் பஜாஜ் பல்சர் வரிசை பைக்குகள் விலை உயர்ந்தது

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் உள்ள 125, 150, 180F, 220F உட்பட என்எஸ் 160, என்எஸ் 200 மற்றும் டொமினார் 250 போன்வற்றின் விலை கனிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ்-6 அறிமுகத்திற்கு பிறகு தொடர்ந்து இருசக்கர வாகனங்ளின் விலை அதிகரித்து வருகின்றது.

பஜாஜ் உட்பட பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்ந்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக பைக்குகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகின்றது.

பல்சர், டொமினார் விலை பட்டியல்;-

Pulsar 125 Drum: ரூ. 72,122

Pulsar 125 Disc: ரூ. 76,922

Pulsar 125 Split Seat Drum: ரூ. 73,274

Pulsar 125 Split Seat Disc: ரூ. 80,218

Pulsar 150 Neon: ரூ. 92,627

Pulsar 150: ரூ.99,584

Pulsar 150 Twin Disc: ரூ.1,03,482

Pulsar 180F Neon: ரூ. 1,13,018

Pulsar 220F: ரூ. 1,23,245

Pulsar NS 160: ரூ.1,08,589

Pulsar NS 200: ரூ.1,31,219

Dominar 250 : ரூ.165,715

பல்சர் மற்றும் டொமினார் 250 போன்ற பைக்குகளின் தோற்றம் மற்றும் வசதிகளில் எந்தவொரு மாற்றங்களும் இல்லை.

(விற்பனையக விலை டெல்லி)

Exit mobile version