Automobile Tamilan

ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

bmw ce 02

அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ CE02 ஸ்கூட்டரின் அறிமுக சலுகை விலை ரூபாய் 4,49,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்பாக இந்நிறுவனம் ரூ.14.90 லட்சத்தில் சிஇ04 எலெகட்ரிக் மாடலை வெளியிட்டிருந்த நிலையில் டிவிஎஸ் மோட்டார் தயாரிக்கின்ற சிஇ02 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 km/hr ஆகும். மேலும், காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் பிளாக் 2 என இரு நிறங்களை பெற்றுள்ளது.

CE02 ஸ்கூட்டரில் 3.9kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 15hp பவரை வழங்குகின்ற வேரியண்ட 108km ரேஞ்ச் கொண்டுள்ளது. இதன் எடை 132 கிலோ கொண்டு இந்த மாடலில் 0.9kW நிலையான சார்ஜர் அல்லது விருப்பமான 1.5kW ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம்.

0-100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 5 மணிநேரம் 12 நிமிடம் எடுக்கும், அடுத்து 1.5kW வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி 3 மணிநேரம் 30 நிமிடம் தேவைப்படும்.

டபுள்-லூப் ஸ்டீல் ஃப்ரேமை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள CE 02 ஸ்கூட்டரில் முன்புறத்தில் USD ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் கொண்டுள்ளது. இரு பக்கமும் 14-இன்ச் சக்கரத்தை பெற்று பிரேக்கிங் 239 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ பின்புறத்தில் டிஸ்க் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

துவக்கநிலை வேரியண்டில் எல்இடி லைட்டிங், யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட், இரண்டு ரைடிங் மோடுகள் (Flow and Surf), ஆட்டோமேட்டிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (Automatic Stability Control), ரெக்யூப்பரேஷன் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (Recuperation Stability Control), ரிவர்ஸ் மோட், கீலெஸ் வசதி, திருட்டு தடுக்கும் அலாரம் மற்றும் 3.5-இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து டாப் ஹைலைன் வேரியண்டில் கூடுதல் வசதிகளாக மூன்று ரைடிங் மோடுகள் (Flash, Flow and Surf) மேலும், கோல்டன் நிறத்திலான ஃபோர்க்குகள், இதில் ஹீட் கிரிப்ஸ், இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன் ஹோல்டர் மற்றும் விரைவான 1.5kW சார்ஜர் ஆகியவையும் உள்ளது.

Exit mobile version