Automobile Tamilan

ஹீரோ HF டீலக்ஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் பைக் அறிமுக விபரம்

hero hf deluxe flex fuel

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் E85 என்ஜின் பெற்ற மாடல்களை காட்சிப்படுத்தி வரும் நிலையில் ஹீரோவின் HF டீலக்ஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் மாடலை சர்வதேச பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் முன்பே குறிப்பிட்ட படி, E85 இரட்டை எரிபொருள் ஆதரவினை கொண்ட HF டீலக்ஸ், கிளாமர், ஸ்பிளெண்டர்+ மாடல்களை ஏற்கனவே ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் உறுதிப்படுத்தியிருந்தது.

Hero HF Deluxe Flex Fuel

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க உள்நாட்டில் எத்தனால் தயாரிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்திய அரசு எத்தனால் சார்ந்த எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

ஃபிளெக்ஸ் ஃப்யூவல் ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில்  97.2cc ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் என்ஜின் பெற்று அதிகபட்சமாக 8000 rpm-ல் 8.02 bhp , 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மற்றபடி, விற்பனையில் உள்ள மாடலை போலவே டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பருடன் இரு பக்க டயரிலும் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் அமைப்பினை கொண்டுள்ளது.

பரவலாக நாடு முழுவதும் எத்தனால் எரிபொருள் கிடைக்க துவங்கும் பொழுதும் பெரும்பாலான இந்திய தயாரிப்பாளர்கள் ஹீரோ, பஜாஜ், ராயல் என்ஃபீல்டு, டிவிஎஸ் , சுசூகி ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களும் கான்செப்ட் நிலையில் வெளிப்படுத்தியுள்ளதால் 2025 ஆம் ஆண்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மாடலை விற்பனைக்கு வெளியிடலாம்.

Exit mobile version