Automobile Tamilan

ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரின் சோதனை ஓட்ட உளவு படங்கள்

hero xoom 125 testing

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஜூம் 110 ஸ்கூட்டரின் அடிப்படையில் ஜூம் 125 மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக டிவிஎஸ் என்டார்க் 125, யமஹா ரே இசட்ஆர், மற்றும் சுசூகி அவெனிஸ் ஆகியவற்றுடன் ஏப்ரிலியா SR 125 ஸ்கூட்டரையும் எதிர்கொள்ள உள்ளது.

ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜூம் மிக சிறப்பான வரவேற்பினை 110cc சந்தையில் பெற்றுள்ளது. இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகியவற்றுடன் ஜூம் 125 மாடலும் வரவுள்ளது.

Hero Xoom 125

சமீபத்தில் ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக் மாடலை வெளியிட்டிருந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு பிரீமியம் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்தப்படியாக , ஹீரோ மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஸ்கூட்டர் மாடல் ஒன்றை காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.

தற்பொழுது சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் ஸ்கூட்டர் ஜூம் 110 போல அமைந்திருப்பதுடன், மிக ஸ்போர்ட்டிவான அம்சத்தை கொண்டதாக விளங்குகின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலில் அனேகமாக 124.6cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 9.1hp பவர் மற்றும் 10.4Nm டார்க் வழங்கலாம். மேஸ்ட்ரோ ஜூம் 125 என்று அழைக்கப்படலாம்.

தொடர்ந்து ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் 110cc சந்தையில் மிக வேகமான ஸ்கூட்டராகவும், 160சிசி சந்தையில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மிக வேகமான மாடல் என ஹீரோ தெரிவித்துள்ளதால், ஜூம் 125 மாடல் விற்பனைக்கு வரும்பொழுது மிக வேகமாக 0-60 கிமீ தொடும் மாடலாக விளங்கலாம்.

அடுத்த சில மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் ஜூம் 125 பற்றி அறிமுகம் குறித்தான தகவல்  வெளியாகலாம். ஹோண்டா நிறுவனம் பெரிதாக வரவேற்பினை பெறாத கிரேஸியா 125 மாடலுக்கு மாற்றாக டியோ 125 ஸ்கூட்டரை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

image source

Exit mobile version