கேடிஎம் பைக் தயாரிப்பாளரின் அட்வென்ச்சர் ரக வரிசையில் குறைந்த விலை கொண்ட மாடலாக 250 அட்வென்ச்சர் விளங்க உள்ளது. முன்பாக இஐசிஎம்ஏ அரங்கில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் வெளியானதை தொடர்ந்து இந்தியாவில் டிசம்பர் மாதம் விற்பனைக்கு ளியாக உள்ளது.
390 அட்வென்ச்சர் பைக்கின் பின்புலத்தை பெற்று வந்துள்ள 250 அட்வென்ச்சர் மாடலில் பல்வேறு விலை குறைப்பிற்கான நடவடிக்கையுடன் 250 டியூக் மாடலில் இடம்பெற்றுள்ள 249.8 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்படலாம்.
மற்றபடி தோற்ற அமைப்பில் பெரும்பாலும் 390 அட்வென்ச்சர் பேனல்களை பகிர்ந்து கொள்கின்ற 250 அட்வென்ச்சரில் டிஎஃப்டி டிஸ்பிளே கிளஸ்ட்டரை பெற்றதாக வரவுள்ளது. இந்த பைக்கில் 855 மிமீ இருக்கை உயரம், 200 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றதாகவும் 14.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கினை பெற்றுள்ளது. 390 ADV மாடலில் உள்ளதை போன்ற ஸ்பிளிட் எல்இடி விளக்கினை பெறவில்லை.
மிக சிறப்பான ட்ரெயின் பயணத்திற்கு ஏற்ப 170 மிமீ பயணிக்கும் தன்மையுடன் வடிமைக்கப்பட்ட இன்வெர்டேட் முன்புற ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை இரண்டுமே WP நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் மற்றும் வீல்களை கொண்டுள்ளது. ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு பயணத்துக்கு ஏற்ப டயரினை கொண்டுள்ளது.. பிரேக்குகளில் ரேடியல் காலிபருடன் கூடிய 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் ஆகியவை பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், கவாஸாகி வெர்சிஸ் X-300 மற்றும் பிஎம்டபிள்யூ 310 GS போன்ற மாடல்களுடன் குறைவான விலை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 போன்ற மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி கேடிஎம் 390 அட்வென்ச்சர் வெளியாக உள்ள நிலையில், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் 290 அட்வென்ச்சர் விற்பனைக்கு வரக்கூடும். இஐசிஎம்ஏ 2019 அரங்கில் உயர் ரக கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர், கேடிஎம் 890 டியூக் ஆர் போன்ற மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.