மீண்டும் யமஹா RD350 பைக் விற்பனைக்கு வருகையா.!

யமஹா மோட்டார் நிறுவனம் மீண்டும் ரெட்ரோ ஸ்டைலுடன் RD350 மற்றும் RD250 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பல்வேறு நாடுகளில் RZ350 மற்றும் RZ250 என்ற பெயரில் 1980-1990 களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்திய சந்தையில் யமஹா நிறுவனம் மற்றும் எஸ்கார்ட்ஸ் குழுமத்துடன் இணைந்து ராஜ்தூத் 350 பைக் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 1983 முதல் 1989 வரை தயாரிக்கபட்டு விற்பனை செய்யப்பட்டது. RD என்றால் Race Dervied என்பது பொருளாகும்.

2023 Yamaha RD350

மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்துகின்ற மாடலாக விற்பனை செய்யப்பட்ட யமஹா RD350 பைக்கில் இரண்டு ஸ்டோரக்  347cc ஏர் கூல்டு பேரலல் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 30.5 hp பவர் மற்றும் 32.3 Nm டார்க் வெளிப்படுத்தியது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தது.

ஜப்பான் சந்தையில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக அதிகபட்ச பவர் 39 hp வரை வெளிப்படுத்தி டாப் ஸ்பீடு 160Km/h வரை செல்லும் திறனை பெற்றிருந்தது.

ராயல் என்ஃபீல்டு, ஜாவா, யெஸ்டி, பஜாஜ்-ட்ரையம்ப் மற்றும் ஹீரோ-ஹார்லி பைக்குகளுக்கு  சவால் விடுக்கும் வகையில் கிளாசிக் ஸ்டைலை பெற்ற புதிய யமஹா RD350 விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானில் வர்த்தக முத்திரை பதிவுக்கு யமஹா பதிவு செய்துள்ள RZ350 மற்றும் RZ250 பெயர்களை பெற்ற மாடல்கள் இந்திய சந்தைக்கு வந்தால் யமஹா RD350 பெயரும் குறிப்பாக இந்தியாவில் புதுப்பிக்கப்படலாம். RD350 என்பது இந்திய இருசக்கர வாகன வரலாற்றில் ஒரு முத்திரை பதித்த மோட்டார்சைக்கிள் ஆகும்.

RZ350 மற்றும் RZ250 பெயர்களுக்கான காப்புரிமை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதிய மாடல்களின் மற்ற விவரங்கள் வெளியாகவில்லை. சர்வதேச அளவில் யமஹா நிறுவனம் MT-03 , R3 மாடல்களை 300cc பிரிவில் விற்பனை செய்து வருகின்றது.

விரைவில், இந்திய சந்தையில் யமஹா R3 மற்றும் எம்டி-03 பைக்குகள் விற்பனைக்கு வரவுள்ளது.

image source –  Cheemais/ wikipedia Rajdoot 350

This post was last modified on May 6, 2023 7:45 AM

Share
Tags: Yamaha RD350