புதிய FAME-II நடைமுறைக்கு ஏற்ப மேட்டர் ஏரா 5000 மற்றும் 5000+ என இரு எலக்ட்ரிக் பைக்குகளின் விலை ரூ.30,000 வரை உய்ர்த்தகப்படுவதனால் விலை ₹ 1.74 லட்சம் முதல் ₹ 1.84 லட்சமாக ஜூன் 6 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
மானியம் சமீபத்தில் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. ஏதெர் 450x ஸ்கூட்டர் விலை ரூ.32,500 வரை உயருகின்றது. இதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் விலையை உயர்த்த உள்ளது.
இந்தியாவின் முதல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எலக்ட்ரிக் பைக் மாடலாக விளங்குகின்ற பொதுவாக 5kWh பேட்டரி பொருத்தப்பட்டு லிக்யூடு கூல்டு மோட்டார் அதிகபட்சமாக 10KW பவர் வெளிப்படுத்தும். மிக முக்கிய அம்சமாக 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் ஆகும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6 விநாடிகளுக்கு குறைவான நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். 3+1 ரைடிங் மோடு கொண்டுள்ளது. ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் ரேஞ்சு நிகழ்நேரத்தில் 125 கிமீ வழங்கும்.
வீட்டிலுள்ள சார்ஜர் கொண்டு சார்ஜிங் பயன்படுத்தும் போது 5 மணி நேரம் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 2 மணி நேரம் ஆகும்.
வெளியிடும் பொழுது அறிவிக்கப்பட்ட விலை மேட்டர் Aera 5000 – ₹ 1.44 லட்சம் மற்றும் மேட்டர் Aera 5000+ – ₹ 1.54 லட்சம் (ex-showroom India)
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மற்றும் மதுரை என மூன்று மாவட்டங்களில் கிடைக்க உள்ளது.
ஜூன் 6 முதல் புதிய விலை
மேட்டர் Aera 5000 – ₹ 1.74 லட்சம்
மேட்டர் Aera 5000+ – ₹ 1.84 லட்சம்
(ex-showroom India)