2023 எத்தர் 450X மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மேம்படுத்தி உள்ளது. புதிய ஏத்தர் 450 எக்ஸ் மாடல் நான்கு புதிய வண்ணங்களுடன் புதிய இருக்கை மற்றும் AtherStack 5.0 மென்பொருள் மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது. மின்சார ஸ்கூட்டர் இப்போது ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அவை லூனார் கிரே, ட்ரூ ரெட், காஸ்மிக் பிளாக், சால்ட் கிரீன், ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்டில் ஒயிட்.

Atherstack 5.0 மென்பொருள் புதுப்பிப்பு புதிய பயனர் இடைமுகம், புதிய தகவல் தளவமைப்பு மற்றும் கூகுள் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட வெக்ட்ர் மேப்ஸ் உள்ளிட்ட புதிய அம்சங்களைக் கொண்டு கிடைக்கப் பெற்றுள்ளது. வரைபடங்கள் இப்போது ஏற்றுவதற்கு மென்மையாகவும், லேயரிங், லைவ் டிராஃபிக் காட்சி மற்றும் எதிர்கால மாற்றத்தை பெறும் அம்சங்களையும் உள்ளடக்கியது. நீங்கள் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தும் போது ஃபோனில் பார்ப்பது போன்றே இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய மென்பொருள் வசதியில் உள்ள மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் ஆட்டோஹோல்ட் செயல்பாடு அல்லது ஹில் ஹோல்ட் ஆகும், இது பிரேக்குகளைப் பிடிக்காமல் ஸ்கூட்டரை  தடுக்கிறது. எதிர்காலத்தில் க்ரூஸ் கன்ட்ரோல், க்ரால் கன்ட்ரோல் மற்றும் அட்வான்ஸ்டு ரீஜென் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஏத்தர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புதிய ஏத்தர் 450x இருக்கை முன்பக்கத்தில் சற்று குறுகலாக உள்ளது உயரம் குறைவான ரைடர்ஸ் தங்கள் கால்களை தரையில் வசதியாக வைக்க உதவுகிறது. நடுப்பகுதி தட்டையானது, உயரமான ரைடர்கள் பின்னால் உட்காருவதற்கு அதிக இடத்தை அனுமதிக்கிறது. பில்லியன் ரைடருக்கு ஆதரவை மேம்படுத்த பின்புற பகுதியும் சிறிது உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட 450X, ஏத்தர் பேட்டரி பாதுகாப்பை 3 ஆண்டு உத்தரவாதத்துடன் 2 வருட உத்தரவாதத்தை நீட்டிக்கப்பட்ட உத்தரவாத திட்டத்தையும் அறிவித்துள்ளது.

சிறப்பு சலுகை

Gen 1 ஸ்கூட்டர் உரிமையாளர்களுக்கான மேம்படுத்தல் திட்டத்தையும் ஏத்தர் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுக்கு மேற்பட்ட ஸ்கூட்டர் வைத்திருப்பவர்கள் ரூ.90,000 செலுத்தி புதிய 450X ஐ வாங்கலாம். அதேசமயம், மூன்று வருடங்களுக்கு குறைவான காலத்தில் 450எக்ஸ் ஸ்கூட்டர் வைத்திருப்பவர்கள், 80,000 ரூபாய் செலுத்த வேண்டும். மார்ச் 2023க்குள் மேம்படுத்தத் திட்டமிடுபவர்களுக்கு கூடுதலாக ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும்.

ஏத்தர் 450X விலை ரூ.1,60,205 மற்றும் பிளஸ் வேரியண்ட் ரூ.1,37,195 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என பட்டியலிடப்பட்டுள்ளது.

Share
Tags: Ather 450X