Automobile Tamilan

குறைந்த விலையில் 127கிமீ ரேஞ்ச் வழங்கும் பஜாஜ் சேட்டக் 3001 வெளியானது

பஜாஜ் சேட்டக் 3001

பஜாஜ் ஆட்டோ நிறுவன சேட்டக் 3001 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 127 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்று ரூ.99,920 எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2903 மாடலுக்கு மாற்றாக வந்துள்ள புதிய சேட்டக் 3001 ஸ்கூட்டரில் உள்ள 750W சார்ஜரை கொண்டு 0-80% சார்ஜிங் ஏறுவதற்கு 3 மணி நேரம் 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என இந்நிறுவன அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தையில் கிடைக்கின்ற 35 சீரிஸ் மாடலில் இருந்த பெறப்பட்ட சேஸிஸ் உட்பட பெரும்பாலான வசதிகளை பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய 3001 மாடலிலும் பேட்டரி ஆனது ஃபுளோர் போர்டின் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதால், பூட்ஸ்பேஸ் மிக சிறப்பான முறையில் 35 லிட்டர் கொண்டிருக்கின்றது.

ஆனால் இந்நிறுவனம் மோட்டார் வகை, பவர், டார்க் மற்றும் அதிகபட்ச வேகம் உள்ளிட்ட தகவல்கள் மற்ற நுட்பவிபரங்களை தெளிவுப்படுத்தவில்லை. இந்த விபரங்கள் அனைத்தும் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கலாம்.

மேலும், இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆக இருக்கலாம், அதே நேரத்தில் டெக்பேக் மூலமாக பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற முடியும், அதன் விபரங்கள் மற்றும் விலை அறிவிக்கப்படவில்லை.

Exit mobile version