நார்டன் கமாண்டோ 961 பைக் முன்பதிவு தொடங்கியது

இங்கிலாந்து நாட்டின் நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்திய சந்தையில் கைனெட்டிக் குழுமத்துடன் இணைந்து இந்திய சந்தையில் மோட்டார்ராயலே டீலர்கள் வாயிலாக நார்டன் கமாண்டோ 961 பைக்கிற்கு ரூ.2 லட்சம் முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நார்டன் கமாண்டோ 961 பைக்

நவீனத்துவமான டிசைன் அம்சங்களை பெற்ற கிளாசிக் ரக பாரம்பரியத்தை கொண்டதாக நார்டன் கமாண்டோ 961 பைக் கஃபே ரேஸர் மற்றும் ஸ்போர்ட் என இரண்டு விதமான மாடல் அடிப்படையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முதற்கட்டமாக கைனெட்டிக் குழுமத்தின் மோட்டார்ராயல் டீலர்கள் வாயிலாக ரூ.2 லட்சம் அல்லது பைக்கின் பாதி விலை அதாவது ரூ.12 லட்சம் முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் பட்சத்தில் முழுவதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக கமாண்டோ 961 ஜூன் மாத மத்தியில் டெலிவரி தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஏர் மற்றும் ஆயில் மூலம் குளிர்விக்கும் 961 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 80 பிஎஸ் மற்றும் 90 என்எம் இழுவைத் திறன் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள கமாண்டோ 961 பைக் இந்தியாவில், இந்த வருடத்தின் இறுதியில் அதாவது டிசம்பர் 2018-க்குள் இந்தியாவில் பாகங்களை தருவித்து ஒருங்கிணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

நார்டன் கமாண்டோ 961 பைக் விலை ரூ.23.40 லட்சம் ஆகும்.