Automobile Tamilan

புதிய கருப்பு நிறத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 வெளியானது

Royal Enfield Bullet 350 battalion black

பண்டிகை காலத்தை முன்னிட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட புல்லட் 350 மாடல்களில் பட்டாலியன் கருப்பு என்ற நிறத்தை ரூ.1,74,875 விலையில் விற்பனைக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்பாக இந்த மாடலில் மில்ட்டரி வரிசையில் சிவப்பு, கருப்பு, சில்வர் ரெட், சில்வர் பிளாக், இது தவிர ஸ்டாண்டர்டில் கருப்பு, மரூன் மற்றும் டாப் மாடலாக பிளாக் கோல்டு என 7 நிறங்கள் கிடைத்து வருகின்றது.

மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை தொடர்ந்து கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 என இரண்டு ஒரே J வரிசை 349சிசி எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்றது. 6100 RPM-ல் 20hp பவர் மற்றும் 4,000 RPM-ல் 27Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது கொண்டிருக்கும்.

41 மிமீ முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர், அகலமான டயர்களாக முன்புறத்தில் 100/90 -19 மற்றும் பின்புறத்தில் 120/80 -18 உள்ளது. புல்லட் 350 மாடலின் எடை 195 கிலோ, கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ, இருக்கை உயரம் 805 மிமீ மற்றும் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 13 லிட்டர் ஆகும்.

முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு 153 மிமீ டிரம் பிரேக் விருப்பத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

(Ex-showroom Tamilnadu)

Exit mobile version