Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ஃபிளெக்ஸ் ஃப்யூவல் அறிமுகம்

Royal Enfield Classic 350 flex fuel

2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் 85 % எத்தனாலை கொண்டு இயங்கும் வகையில் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் மாடல் முன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசு தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.

Royal Enfield Classic 350 Flex Fuel

பச்சை மற்றும் சிவப்பு நிற கலவையை பெற்ற புதிய நிறத்தை கொண்டுள்ள கிளாசிக் 350 ஃபிளெக்ஸ் ஃப்யூவல் மாடலில் உள்ள  J-series 349cc என்ஜின் ஆனது 85 % எத்தனால் மற்றும் 15 % பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

349cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் 20.2 Bhp பவரையும் , 4000rpm-ல் 27 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் பரவலாக 85% எத்தானல் மாடல்களை காட்சிப்படுத்தி வரும் நிலையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு பரவலாக ஃபிளெக்ஸ் ஃப்யூவல் பைக்குகள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கிளாசிக் 350 ஃபிளெக்ஸ் ஃபியூவல் அறிமுகம் குறித்தான எந்த தகவலையும் ராயல் என்ஃபீல்டு வெளியிடவில்லை. இந்த ஜே சீரிஸ் என்ஜின் ஆனது கிளாசிக் மட்டுமல்லாமல் ஹண்டர் 350, மீட்டியோர் 350 மற்றும் புல்லட் 350 ஆகியவற்றிலும் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

Exit mobile version