ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 350cc பைக்குகளின் வரிசை இப்பொழுது முழுமையாக J-series என்ஜின் பெற்றுள்ளதால் புல்லட் 350, மீட்டியோர் 350, கிளாசிக் 350, மற்றும் ஹண்டர் 350 ஆகிய பைக்குகளின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக, அனைத்து 350சிசி என்ஃபீல்டு பைக்குகளில் உள்ள J-series என்ஜின் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டுள்ளது. 349cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் 20.2 Bhp பவரையும் , 4000rpm-ல் 27 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Royal Enfield Bullet 350
90 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் உள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல் முதன்முறையாக கிக் ஸ்டார்டர் ஆப்ஷனை இழந்து புதிய தலைமுறையினர் விரும்பும் வகையிலான அம்சத்துடன் மேம்பட்டுள்ளது. மூன்று விதமான பிரிவில் கிடைக்கின்ற புல்லட் 350 பைக்கில் தொடர்ந்து பாரம்பரியமான வடிவமைப்பினை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
புதிய ஃபிரேம் பெற்றுள்ள வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டதாக உள்ள நிலையில், முன்பக்கம் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 270 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்கை பெறுகின்றன. 100/90-19 யூனிட் மற்றும் பின்புறத்தில் 120/80-18, முன்புறத்தில் 19 இன்ச் ஸ்போக் வீல் மற்றும் பின்புறத்தில் 18 இன்ச் ஸ்போக் வீல் இருக்கும்.
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மிலட்டரி ரெட், பிளாக் மாடல் விலை ரூ.1,73,562, அடுத்து டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு மரூன் மற்றும் பிளாக் மாடல் விலை ரூ. 1,97436 மற்றும் பிளாக் கோல்டு ரூ.2,15,801 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)
- RE Bullet 350 Drum – ₹1,99,062 (மில்ட்டரி சிவப்பு மற்றும் மில்ட்டரி கருப்பு)
- RE Bullet 350 STD – ₹ 2,25,036 (மரூன் மற்றும் கருப்பு)
- RE Bullet 350 Black Gold – ₹ 2,45,081 (பிளாக் கோல்டு)
(on-Road price in Tamil Nadu)
Royal Enfield Classic 350
250-750cc நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலில் சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என பெற்று 12 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.
டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டதாக உள்ள நிலையில், முன்பக்கம் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 270 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்கை பெறுகின்றன. 100/90-19 யூனிட் மற்றும் பின்புறத்தில் 120/80-18, முன்புறத்தில் 19 இன்ச் ஸ்போக் வீல் மற்றும் பின்புறத்தில் 18 இன்ச் ஸ்போக் வீல் இருக்கும்.
ரெட்டிச் கிரே, ரெட்டிச் ரெட் நிறங்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் ரூ.1,93,080 , ஹெல்சியன் பிளாக், க்ரீன் விலை ரூ. 1,95,919, அடுத்து, டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற ஹெல்சியன் பிளாக், க்ரீன் விலை ரூ.2,02,904, சிக்னல்ஸ் டெஸ்ட் சேனட், மற்றும் மார்ஸ் கிரே விலை ரூ.2,13,852 , டார்க் கன்மெட்டல் கிரே, ஸ்டெல்த் பிளாக் விலை ரூ.2,20,991, இறுதியாக க்ரோம் ரெட் மற்றும் பிரான்ஸ் விலை ரூ.2,24,755 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு) ஆகும்.
- RE Classic 350 Single Channel ABS – ₹ 2.20256 (Reditch grey and Red)
- RE Classic 350 Single Channel ABS – ₹ 2,23,349 (Halcyan Black, Green)
- RE Classic 350 Dual Channel ABS – ₹ 2,30,074 (Halcyan Black, Green)
- RE Classic 350 Dual Channel ABS – ₹ 2,42,877 (Signals Desert Sand, Grey)
- RE Classic 350 Dual Channel ABS – ₹ 2,50,652 (Dark Gunmetal Black, grey)
- RE Classic 350 Dual Channel ABS – ₹ 2,54,751 (Chrome Red, Bronze)
(on-Road price in Tamil Nadu)
Royal Enfield Meteor 350
க்ரூஸர் ஸ்டைலை பெற்ற ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கில் முதன்முறையாக ஜே சீரிஸ் என்ஜின் பொருத்தப்பட்டது. 11 விதமான நிறங்களை பெறுகின்ற மீட்டியோர் 350 மாடலில் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர் நோவா என மூன்று விதமான வேரியண்டுகள் உள்ளது.
டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக உள்ள நிலையில், முன்பக்கம் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 270 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்கை பெறுகின்றன. 100/90-19 யூனிட் மற்றும் பின்புறத்தில் 120/80-17, முன்புறத்தில் 19 இன்ச் ஸ்போக் வீல் மற்றும் பின்புறத்தில் 17 இன்ச் ஸ்போக் வீல் இருக்கும்.
மீட்டியோர் 350 ஃபயர்பால் விலை ரூ.2,04,408 , ஃபயர்பால் பிளாக் கஸ்டம் ரூ. 2,07,679, ஸ்டெல்லர், விலை ரூ.2,10,580 மற்றும் சூப்பர் நோவா வேரியண்ட் விலை ரூ. 2,25,533 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)
RE Meteor 350 Fireball – ₹ 2,32,594 (matte green,blue,yellow,red)
RE Meteor 350 Fireball – ₹ 2,34,593 (black custom)
RE Meteor 350 Steller – ₹ 2,39,314 (blue,red, black,)
RE Meteor 350 Super nova – ₹ 2,55,600 (Red,brown ,blue)
(on-Road price in Tamil Nadu)
Royal Enfield Hunter 350
கிளாசிக் மாடலை அடுத்து ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 அதிக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் நிலையில் குறைந்த விலை மாடல் என்ற பெயருடன் ரோட்ஸ்டெர் ஸ்டைல் விளங்குகின்றது. ரெட்ரோ மற்றும் மெட்ரோ என இருவிதமான வேரியண்டில் 8 விதமான நிறங்களை பெற்றுள்ளது.
ரெட்ரோ வேரியண்ட் விலை ரூ.1,49,900, மெட்ரோ டேப்பர் ரூ.1,69,656 மற்றும் மெட்ரோ ரிபெல் ரூ. 1,74,655 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)
RE Hunter 350 retro – ₹ 1,73,231 (factory silver, Black)
Re Hunter 350 Metro Dapper – ₹ 1,94,746 (Dapper grey, Ash, White)
Re Hunter 350 Metro Rebel – ₹ 2,00,195 (Rebel Red,Black, Blue)
(on-Road price in Tamil Nadu)