Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கின் விலை எதிர்பார்ப்புகள்

Royal Enfield shotgun 650

பாபர் ரக ஸ்டைலை பெற்ற புதிய ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ட்வீனில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகள் மற்றும் எவ்வளவு விலை தொடர்பான பல்வேறு தகவல்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

சந்தையில் கிடைக்கின்ற சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் அடிப்படையில் பேரலல் ட்வீன் 650சிசி என்ஜினை கொண்டதாக வந்துள்ளது.

Royal Enfield ShotGun 650

2021 ஆம் ஆண்டு EICMA அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட SG650 கான்செப்ட் அடிப்படையில் கஸ்டமைஸ் பைக்குகளின் மீதான ஆர்வத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள பாபர் ரக மோட்டார்சைக்கிள் ஸ்டைலை கொண்டுள்ள ஷாட்கன் 650 பைக் மாடலில் தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல்  648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன்,  4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டின் ஷாட்கன் 650 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 22 கிமீ வரை கிடைக்கலாம் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த என்ஜின் சூப்பர் மீட்டியோர் 650, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 ஆகிய மாடல்களில் கிடைத்து வருவது குறிப்பிடதக்கதாகும்.

நிறங்கள் மற்றும் பரிமாணங்கள்

எல்இடி ஹெட்லைட் பெற்ற ஷாட்கன்னில் ஸ்டென்சில் வெள்ளை, பிளாஸ்மா நீலம், பச்சை டிரில் மற்றும் ஷீட்மெட்டல் கிரே என நான்கு நிறங்களை கொண்டதாக அமைந்துள்ளது. பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2,220mm, அகலம் 820mm மற்றும் உயரம் 1,105mm பெற்றுள்ளது. வீல்பேஸ் 1,465mm பெற்று கிரவுண்ட் கிளியரண்ஸ் 13.8 லிட்டர் கொள்ளளவு , கெர்ப் எடை 240 கிலோ மற்றும் அகலமான ஹேண்டில்பார் மத்தியில் கொடுக்கப்பட்டுள்ள ஃபூட் பெக் உடன் இருக்கை உயரம் 795mm ஆகும்.

இந்த பைக் மாடலில் 18 அங்குல வீல் முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் கொண்டுள்ளது. 43 மிமீ முன்புற ஷோவா பிஸ்டன் ஃபோர்க் மற்றும் வழக்கமான ட்வின் ஷாக் அப்சார்பர் உள்ளது.

பிரேக்கிங் அமைப்பு

ஷாட்கன் 650ல்,  ஒற்றை இரண்டு-பிஸ்டன் பெற்ற ஃபுளோட்டிங் பைபெர் பிரேக் காலிபர் 320mm டிஸ்க் மற்றும் ஒற்றை இரண்டு-பிஸ்டன்ஃபுளோட்டிங் பைபெர் பிரேக் காலிபர் பின்புறத்தில் 300mm டிஸ்க் கொண்டிருக்கின்றது. டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

கிளஸ்ட்டர் மற்றும் கனெக்ட்டிவ் வசதி

வட்ட வடிவத்தை பெற்ற செமி டிஜி அனலாக் கிளஸ்ட்டர் பெற்றதாகவும் கூடுதலாக டிரிப்பர் நேவிகேஷன் பெற்று ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியை ராயல் என்ஃபீல்டு ஆப் மூலம் விங்மேன் வசதி பெறப்படுகின்றது.  விங்மேன் மூலம் பயணச் சுருக்கம், கடைசியாக நிறுத்தப்பட்ட இடம் மற்றும் வாகன விழிப்பூட்டல்கள் போன்ற தகவல்களை பெறுகின்றது. ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வசதியாக யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் பெற்றுள்ளது.

பின்புற இருக்கையை மிக எளிமையாக நீக்கும் வகையில் கீ கொண்டு நீக்குவதனால் ஒற்றை இருக்கை ஆப்ஷனை இலகுவாக பயன்படுத்தலாம்.

குறிப்பாக பல்வேறு கஸ்டமைஸ் வசதியை வழங்கும் நோக்கில் ராயல் என்ஃபீல்டு இந்த மாடலுக்கு 31க்கு மேற்பட்ட ஆக்ஸசெரீஸ்களை ஆதரிக்கின்றது.

சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற மோட்டோவெர்ஸ் 2023 அரங்கில் பிரத்தியேக ஷாட்கன் 650 மாடல் 25 யூனிட்டுகள் மட்டுமே ரூ.4.25 லட்சத்தில் விற்பனைக்கு வெளியானது.

ஷாட்கன் 650 Vs சூப்பர் மீட்டியோர் 650

புதிய ஷாட்கன் 650 பைக்கின் அளவில் 2,220 மிமீ நீளத்தை பெற்று, இது சூப்பர் மீட்டியோர் மாடலை விட 40 மிமீ குறைவாகவும், 70 மிமீ குறுகலாகவும், 50 மிமீ உயரம் குறைவாகவும், 35 மிமீ குறைந்த வீல்பேஸ் (1,465 மிமீ) கொண்டுள்ளது. மேலும், கர்ப் எடை சூப்பர் மீட்டியோர் 241 கிலோவை விட சற்றே குறைவாக உள்ளது.

க்ரூஸர் மாடலுக்கு ஏற்ப முன்புறத்தில் ஃபூட் பெக் பெற்று மிகவும் ரிலாக்ஸான ரைடிங் பொசினை பெற்ற சூப்பர் மீட்டியோர் மாடலை விட சற்று ஸ்போர்ட்டிவான ரைடிங் பொசிஷன் பெற்றதாக பாபர் ஸ்டைல் ஷாட்கன் விளங்குகின்றது.

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் விலை ?

வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கின் விலை ரூ.3.50 முதல் ரூ. 3.75 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்பு உள்ளது. மோட்டோவெர்ஸ் பதிப்பை விட ரூ.50,000 வரை விலை குறைவாக எதிர்பார்க்கப்படுகின்றது.

650சிசி பிரிவில் பாபர் ஸ்டைல் மாடலுக்கு நேரடியான போட்டியாளர் இல்லையென்றாலும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிற்கு சவாலாக விளங்க உள்ளது.

RE Shotgun 650 Specs

Engine: 648cc, SOHC, air/oil-cooled parallel twin
Bore x Stroke: 78.0 x 67.8mm
Compression Ratio: 9.5:1
Fuel Delivery: EFI
Clutch: Wet, multiplate
Transmission 6-speed, Slip Assit
Power 47 hp at 7,250 rpm
Torque 52 Nm at 4,000 rpm
Frame: Tubular steel
Front Suspension: 43mm inverted fork
Rear Suspension: spring preload adjustable
Front Brake: 320mm disc
Rear Brake: 300mm disc Dual Channel ABS
Wheel Front/Rear: 100/90-18 & 150/70-17 (Tubeless)
Wheelbase: 1465mm
Ground clearance: 140mm
Seat Height: 795mm
Fuel Capacity: 13.8 L
Claimed Curb Weight: 240 Kg

Shotgun 650 bike Photo Gallery

Exit mobile version