பிரமாண்டமான க்ரூஸர் பைக் மாடலான சூப்பர் மீட்டியோர் 650 பைக்கினை விற்பனைக்கு ரூ.3.49 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு வெளியிட்டுள்ளது. மூன்று வேரியண்டுகளும் பொதுவாக என்ஜின் உட்பட மெக்கானிக்கல் ஆப்ஷன்களை பெற்றிருந்தாலும் நிறம், ஆக்செரீஸ் உட்பட டூரிங் சார்ந்த அம்சங்களை மட்டுமே வேறுபாடாக அமைந்திருக்கின்றது.

Astral, Interstellar மற்றும் Celestial என மூன்று வேரியண்ட்களை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர் மீட்டியோர் 650

தொடக்க நிலை அஸ்ட்ரல் மூன்று விதமான நிற வண்ணங்களில் கிடைக்கிறது: அவை கருப்பு, நீலம் மற்றும் பச்சை விலை ரூ.3.49 லட்சம் ஆகும். நடுத்தர இன்டர்ஸ்டெல்லர் இரண்டு நிறங்களை கொண்டுள்ளது. அவை சாம்பல் மற்றும் பச்சை டூயல் டோன் பெயிண்ட் விருப்பங்களைப் பெறுகிறது.  ரூ. 3.64 லட்சம் விலை என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. டாப் செலஸ்டியல் வேரியண்ட், பெரிய முன் கண்ணாடி, டூரிங் சீட் மற்றும் பில்லியன் பேக்ரெஸ்ட் போன்ற சில ஆக்சஸெரீகளை பெற்றுள்ள மாடல் விலை ரூ.3.79 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 300 மிமீ டிஸ்க் கையாளப்படுகிறது, இது இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதன்முறையாக சூப்பர் மீட்டியோர் மூலமாக யூஎஸ்டி ஃபோர்க் அப்சார்பரை வழங்குகின்றது.

முன்புறத்தில் முதன்முறையாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்கினை கொண்டுள்ளது.

648சிசி, இணை-இரட்டை சிலிண்டர் என்ஜின் உள்ளது. இருப்பினும், பவர் 46.2bhp சற்றே குறைவாக உள்ளது. இது 7,250rpm இல் வருகிறது. டார்க் அதிகபட்சமாக 52Nm மாறாமல் இருந்தாலும், 5,650rpm -ல் வருகிறது.