Automobile Tamilan

203 கிமீ ரேஞ்சு.., சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

4971e simple energy mark 2

சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் மாடலாக வெளியிடப்பட்டுள்ள சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் விலை ரூ.1.09 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்டிவ் மற்றும் நவீனத்துவமான டிசைன் அமைப்பினை பெற்றுள்ள சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் பல்வேறு ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி வசதிகள், பேட்டரி ஸ்வாப் மற்றும் நிலையான பேட்டரி மாடல் என இருவிதமான ஆப்ஷனை கொண்டாக உள்ளது. இன்றைக்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு சவாலாக ஒன் விளங்குகின்றது.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டர்

தற்போது விற்பனையில் கிடைக்கின்ற மின் ஸ்கூட்டர்களில் மிக சிறப்பான ரேஞ்சை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒன் ஸ்கூட்டர் அதிகபட்சமாக ஈக்கோ மோடில் 203 கிமீ ரேஞ்சு (236 கிமீ IDC) வழங்கும் என இந்நிறுவன சோதனையின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.95 விநாடிகளை எடுத்துக் கொள்ளும் ஒன் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆக இந்நிறுவன அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

4.5 kW IP67 எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு 72 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்ற இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 98 கிமீ முதல் 105 கிமீ வரை எட்டும்.

Exit mobile version