181 கிமீ ரேஞ்சு.., ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

0

Ola Electric Scooter

ஓலா எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக எஸ்1 விலை ரூ.99,999 மற்றும் எஸ்1 புரோ விலை ரூ.1,29,999 ஆக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு ஆலைகளில் ஒன்றான ஓசூரில் அமைந்து ஓலாவின் பிரத்தியேகமான ஆலையில் ஆண்டுக்கு 10 மில்லியன் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறனை பெற்றிருக்கின்றது.

Google News

ஓலா S1 & S1 Pro எலக்ட்ரிக் நுட்பங்கள்

2.98kWh பேட்டரியை பெற்றுள்ள ஓலா எஸ் 121 கிமீ மற்றும் 3.97kWh பேட்டரியை எஸ் 1 ப்ரோ 181 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்குவதற்கு ‘ஹைப்பர்டிரைவ் மோட்டார்’ என இந்நிறுவனம் அழைக்கிறது. அதிகபட்சமாக 8.5 கிலோவாட் மின் உற்பத்தி செய்கின்ற S1 அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் எஸ் 1 ப்ரோ அதிகபட்சமாக 115 கிமீ வேகத்தில் செல்லும் திறனை கொண்டுள்ளது. 3 விநாடிகளில் (எஸ் 1 ப்ரோ) 0-40 கிமீ வேகத்திலும், 5 விநாடிகளில் (எஸ் 1 ப்ரோ) 0-60 கிமீ வேகத்தை எட்டுகின்றது. இதன் டார்க் 58 என்எம் ஆக உள்ளது.

ஓலா எஸ்1 மின்சார ஸ்கூட்டரில் மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்று நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு பெரிய டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது வழிசெலுத்தல் உட்பட பல தகவல்களைக் காட்டுகிறது. ரைடர் சுயவிவரங்களுக்கு இடையில் மாற உங்களை அனுமதிக்கிறது, தனிப்பட்ட தனிப்பயனாக்கலை அனுமதிக்கிறது. இது தவிர ஹில் ஹோல்டு செயல்பாடு, க்ரூஸ் கட்டுப்பாடு மற்றும் குரல் உதவியாளர் செயல்பாடுகள் உள்ளது. இதுதவிர கூடுதலாக சப்தம் எழுப்பும் வகையில் ஸ்பீக்கர்களில் மாறுபட்ட ஒலிகளை எழுப்பும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

Ola s1 and s1 pro launched

எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் போர்ட்டபிள் ஹோம் சார்ஜருடன்  முறையே 4.48 மணிநேரம் மற்றும் 6.30 மணிநேரத்தில் ஸ்கூட்டர்களை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

Ola s1 and s1 pro price