Automobile Tamilan

புதிய நிறத்தில் சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 அறிமுகம்

பிரசித்தி பெற்ற சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மேக்ஸி ஸ்டைல் என இரண்டு ஸ்கூட்டரிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள நிறங்களில் கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனத்தின் அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் நான்கு புதிய நிறங்களை பெற்றதாக வெளியானது. பொதுவாக இந்த மூன்று ஸ்கூட்டரிலும் 8.5bhp  பவர் மற்றும் 10Nm டார்க்கை வழங்கும் 124சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் ஆனது வழங்கப்பட்டிருக்கின்றது.

suzuki-burgman-street

முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்குடன் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பக்கம் 12 அங்குல டயர் மற்றும் பின்பகுதியில் 10 அங்குல டயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆக்செஸ் 125 இப்போது டூயல் டோனில் மெட்டாலிக் சோனோமா ரெட் மற்றும் பேர்ல் மிராஜ் ஒயிட் கிடைக்கிறது, அதே நேரத்தில் பர்க்மேன் ஸ்ட்ரீட் மெட்டாலிக் மேட் பிளாக் எண்.2 என்ற புதிய நிறத்தைக் கொண்டுள்ளது.

Exit mobile version