ரூ.2,300 வரை சுசுகி ஆக்செஸ் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை உயர்ந்தது

விற்பனைக்கு வெளியிடப்பட்ட மூன்று மாதங்களுக்குள் பிஎஸ்6 என்ஜின் பெற்ற சுசுகி ஆக்செஸ் 125 மாடல் ரூ.2,300 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. முன்பாக பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்ட போது ரூ.6,800 வரை விலை உயர்த்தப்பட்டிருந்தது.

ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் நான்கு விதமான வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது. குறிப்பாக பிஎஸ் 4 என்ஜினை விட டார்க் மடும் 0.2 என்எம் குறைந்துள்ளது. மற்றபடி பவரில் எந்த மாற்றமும் இல்லாமல் எஃப்ஐ முறையை பெற்ற என்ஜினை கொண்டு விற்பனைக்கு வந்துள்ளது. Fi வசதி என்ஜின் பெற்றதாக வந்துள்ள ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் 124 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 6750 ஆர்.பி.எம்-ல் 8.7 பிஎஸ் பவர் மற்றும் அதே நேரத்தில் 5500 ஆர்.பி.எம்-மில் 10 என்எம் டார்க் வழங்கும். இந்த ஸ்கூட்டரின் சி.வி.டி டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

BS-VI சுசுகி ஆக்செஸ் 125 – விலை ஒப்பீடு

வேரியண்ட் முந்தைய விலை (INR) புதிய விலை (INR) வித்தியாசம் (INR)
Drum Brake Variant with CBS 68,285 70,585 2,300
Drum Brake Variant (Alloy Wheel) with CBS 70,286 72,585 2,300
Disc Brake Variant with CBS 71,285 73,487 2,200
Special Edition Drum Brake Variant (Alloy Wheel) with CBS  71,985 74,285 2,300
Special Edition Disc Brake Variant with CBS 72,985 75,185 2,200

போட்டியாளர்களான யமஹா ஃபேசினோ 125 Fi மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல்களை விட குறைந்த விலையில் அமைந்துள்ளது.

 

Exit mobile version