Automobile Tamilan

சுஸூகி ஜிக்ஸர் 250 பைக் வெளியீட்டு விபரம்

77d4a suzuki gixxer 250 bike leak

வருகின்ற மே மாதம் 250சிசி என்ஜினை பெற்ற புதிய சுஸூகி ஜிக்ஸர் 250 பைக் மாடலை இந்தியாவில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. ஜிக்ஸர் 250 பைக் விலை ரூ.1.25 லட்சத்தில் தொடங்கலாம்.

சுஸூகி ஜிக்ஸர் 250

சீனாவில் சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகின்ற Hajou DR300 மாடலின் வடிவ அமைப்பை அடிப்படையாக கொண்ட ஜிக்ஸர் 250 மிக நேர்த்தியான நேக்டூ ஸ்போர்ட்டிவ் அம்சத்தை பெற்றதாக விற்பனைக்கு வரலாம். இதை தவிர முழுதும் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலும் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரலாம்.

250சிசி என்ஜின் விலை குறைவாக அமைதிருக்க வேண்டி லிக்யூடு கூலிங் சிஸ்டத்திற்கு மாற்றாக ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் சிஸ்டத்தடன் ஒற்றை சிலிண்டர் , 4 வால்வுகளுடன் கூடிய SOHC பெற்றிருக்கின்றது.  வரவள்ள பாரத் ஸ்டேஜ்  6 மாசு விதிகளுக்கு ஏற்ற வகையில் , மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த 250சிசி என்ஜின் அதிகபட்மாக 22 பிஎஸ் முதல் 25 பிஎஸ் வரையில் பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அதிகார்வப்பூர்வமான பவர் மற்றும் டார்க் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா FZ25, ஃபேஸர் 25 ஆகிய மாடல்களை எதிர்கொள்ள களமிறங்க உள்ள சுஸூகி ஜிக்ஸர் 250 பைக் மாடல் மே மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிதாக வரவுள்ள இந்த மாடல் கேடிஎம் டியூக் 250, பல்சர் 250, ஆகிய மாடல்களை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

 

Exit mobile version